je t’aime

ஏற்கனவே பலமுறை லாரா ஃபாபியான் பற்றி எழுதியிருக்கிறேன்.  ஃப்ரெஞ்ச் பாடகி.  அவரிடம் இருப்பது போன்ற ஒரு ஆவேசத்தை மைக்கேல் ஜாக்ஸனிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.  இந்தப் பாடல் Je suis malade (I am sick).  இந்த je என்ற வார்த்தையைத் தமிழில் எழுதுவது கடினம்.  ‘ஜ’வுக்கும் ‘ழ’வுக்கும் இடையே வரும் ஒலி.  எழுத முடியாது.  லாரா உச்சரிப்பதைப் பாருங்கள்.  தமிழில் உள்ள ‘ழ’ போல் வேறு எந்த மொழியிலும் இல்லை.  அது போல் ஃப்ரெஞ்சின் je (நான்).  … Read more

சிம்பு, அநிருத் – 2

சிம்பு, அநிருத் இருவரின் செயலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சினிமா ஹீரோ என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கேட்க நாதி இல்லை என்ற அவர்கள் இருவருடைய திமிர் தான். பொதுவெளியில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை. அயோக்கியத்தனம் செய்பவன் கொஞ்சம் ஒளிந்து கொண்டு, அடையாளம் தெரியாமல் செய்வான்.  ஆனால் இங்கே சினிமா ஹீரோ பொதுவெளியில் செய்கிறார்.   என்னுடைய மிக முக்கியமான ஆட்சேபணை எல்லாம், குழந்தைகளைப் பாழடிக்க இந்த ஆட்கள் யார்? … Read more

சிம்பு, அநிருத் இருவரின் சமூக விரோத செயல்!

சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன்.  பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.   ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன்.  ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான். இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song.  சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான்.  சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் … Read more

ஒரு முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தின் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி நடக்க இருந்த என்னுடைய புத்தக வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27-க்கு ஒத்திப் போடப்படுகிறது.  இனி இதில் எந்த மாற்றமும் இருக்காது.  எனவே ஜனவரி 9-க்கு டிக்கட் முன்பதிவு செய்திருந்த நண்பர்கள் உடனடியாக மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு விழா பாரி முனை டெண்ட்டல் காலேஜுக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.  மனுஷ்ய புத்திரன், சமஸ், எடிட்டர் லெனின் … Read more

மூன்று கவிதைகள்

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுதிய மூன்று கவிதைகள்.  சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய கவிதைகள்.   1. மழை மழை மழை மழை வானிலிருந்து அல்ல நரகத்திலிருந்து வருகிறேன் என சொல்லிக் கொண்டு வந்தது மழை   தேவாலய மணி ஒலித்துக் கொண்டே இருந்தது   உனக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி முடிவின்றிப் பொழிந்து கொண்டிருந்த மழையின் முன்னே மண்டியிடுகிறான்   கொஞ்ச நேரத்தில் கணுக்கால் அளவு முழங்கால் அளவு தொடை அளவு … Read more

பார்த்தசாரதி கோவிலில் இஸ்லாமிய சகோதரர்கள் – மக்கள் இயக்கம் – தொடர்ச்சி

சென்ற பதிவில் ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. இந்தப் பேரிடர் மனிதரிடையே இருந்த மத வித்தியாசத்தைக் கூட அகற்றி விட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அங்கே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இதுவரை சென்றிருக்க வாய்ப்பில்லை. இப்போது அந்தக் கோவிலில் அவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அண்டாக்களில் சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதைத்தான் மக்கள் இயக்கம் என்றேன்.  இதையும் சென்ற பதிவோடு சேர்த்து வாசிக்கவும்.