அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியில் நம்பிள் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. முதல் 5 இடங்களுக்குள் வருவது முதல் மற்றும் பெரும் சவால். ஏனென்றால் அமேசான் அல்காரிதம் நமக்குத் தெரியாது. இப்போது கூட பாருங்கள் ஒரு நாவல் 15 ரிவ்யூக்கள் மட்டுமே பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. வழக்கமான பழக்கமான என் வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும்படி இருக்க வேண்டும் என்பது சவால். ஆனால் நான் அப்படி ஏதும் மெனக்கெடவில்லை. வழக்கமான என் பாணியில் நான் லினியராக – நாவல் – ஸ்க்ரீன் ப்ளே – சினிமா – ஷூட் – என கலந்துதான் எழுதினேன். வாசகர்களுக்கு கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும் வேலைதான். ஆனாலும் வாசகர்கள் முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வந்தார்கள். don’t underestimate your readers !
என்னை ரசிக்கும் , என்னை நேசிக்கும் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் தாங்களே போட்டியில் கலந்துகொண்டது போல அசத்தலான ரிவ்யூக்கள் எழுதினார்கள். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் – நீண்ட நாட்கள் நேரில் பழகி வரும் நண்பர்கள் எனக்கு குறைந்தது 40 பேர் இருப்பார்கள்.அவர்களில் யாரும் ஒரு ரிவ்யூ கூட எழுதவில்லை :-)முதல் மாதங்களில் நானும் கொஞ்சம் அலுப்பாகி விட்டேன். பிறகு கடைசி சில நாட்களில் நல்ல முன்னேற்றம் கண்டு முதல் 5 இடத்துக்குள் வந்தது. இன்று முதல் பரிசு. இந்த நாவல் உருவாக்கத்தில் பிழை திருத்தம் மற்றும் அப்லோட் செய்ய உதவியாக இருந்த மனோ மற்றும் கார்த்திக்கிற்கு அன்பு. நாவலை முன்னிட்டு கருந்தேள் ஒரு ஜூம் மீட்டிங்க் போட்டார். இன்னொரு ஜூம் மீட்டிங்கில் ஃபாத்திமா மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். நண்பர் சத்யா இசையமைத்து பாடல் எழுதிக்கொடுத்தார். நாவல் வெளியீட்டுக்கு 20 நண்பர்கள் கோவா வரை வந்திருந்தனர். நண்பர் தருண் தேஜ்பால் நாவலை வெளியிட்டார். அனைவருக்கும் அன்பும் நன்றியும். தமிழ் இந்துவில் இதைப்பற்றி ஒரு செய்தி வெளியிட்டார்கள். நன்றி. ஈ புக் என்றாலும் ஒரு சினிமா வெளியீட்டைப்போல எல்லா ஏற்பாடுகளோடும் நாவல் வெளியானது. நடுவர்கள் சாரு நிவேதிதா மற்றும் சரவண கார்த்திகேயனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நன்றி சொல்ல முடியாது
அன்பு என்றும் சொல்லலாகாது. என் மரியாதை உரித்தாகுக என்று சொல்லி விடுகிறேன்.
உண்மயாகச் சொல்ல வேண்டும் என்றால் முதல் 5 இடங்களிலேயே என் நாவலை நான் உறுதியாக எதிர்பார்க்கவில்லை. ஏன் என்றால் இது கமர்ஷியல் ஜனரஞ்சக பாணி நாவல் இல்லை.
வாசகர்கள் பங்கும் இந்த நாவலுக்குத் தேவை. அதனால் க்ளீஷேவாக இருந்தாலும் – இந்த நாவல் வெற்றி என் வாசகர்களையே சாரும். என் வாசகர்கள் என் அனைத்து நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்களுடன் இந்த வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த நாவலின் வெற்றி இன்னும் இதைப்போன்ற சோதனை முயற்சியில் ஈடுபட ஊக்கமளிக்கும். இவ்வளவு பெரிய போட்டியை முன்னெடுத்து சிறப்பாக நடத்தி வரும் அமேசானுக்கு Amazon Kindle India
பாராட்டுக்கள்.
https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=1381903703