அவதூறுக்கு எதிர்வினை (14): அ. ராமசாமி

தனது வாசிப்பு எல்லைக்குள் சாரு நிவேதிதாவின் எழுத்துகளுக்கு இடமில்லை என்று சொல்வது இலக்கிய நேர்மை . ஆனால், தமிழ் இலக்கியப் பரப்பிலேயே அவருக்கும் அவரது எழுத்து முறைமைக்கும் இடமில்லை எனச் சொல்வது எந்தவிதத்திலும் நேர்மை சார்ந்ததல்ல. தான் நம்பும் கருத்தியலும் வெளிப்பாட்டு முறைமையும் மட்டுமே சரியானது; மற்றவையெல்லாம் விலக்கப்பட வேண்டியன என நினைக்கும் ஒதுக்கல் மனோபாவம்.

எதை எழுதுவது எனத் தெரிவுசெய்து முன்வைப்பதிலும், உலகக் கலை இலக்கியப்பரப்பில் – சினிமா, நாடகம், இலக்கியம் – அவருக்குக் கிடைத்த புதிய பார்வைகளைத் தமிழ் வாசகப்பரப்புக்குக் கொண்டு வருவதிலும் அவர் காட்டியுள்ள அக்கறைகள் முன்மாதிரியில்லாதவை. சொந்த வாழ்க்கை இழப்புகளைப் பொருட்படுத்தாத அவரது எழுத்து வாழ்க்கை கேள்விக்கப்பாற்பட்டது. இரண்டு நாட்களாக அவரை மையமிட்டு நடக்கும் விவாதங்கள் அபத்தமானவை. இதனைக் கடந்து செல்லும் முதிர்ச்சியைச் சாருநிவேதிதா வெளிப்படுத்துவார்.

***