எனக்கு காங்கிரஸைப் பிடிக்காது. ராகுல் காந்தியை அதை விடவும் பிடிக்காது. வெறும் ஸ்டண்ட். வெத்து வேட்டு. இந்தியா பற்றி ஒரு ஆட்டோக்காரருக்குப் புரிந்திருக்கும் அளவுக்குக் கூட ராகுலுக்குப் புரிந்திருக்காது என்பதே என் கருத்து. ஒரு காலத்தில் ராகுல் பிரதம மந்திரியாக ஆனால் இந்தியாவுக்கு அது சாபம். இப்படியெல்லாம் நினைத்தாலும் ராகுலை அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக ரவுடி பேட்டி எடுத்த போது அர்னாபின் உடல் மொழியும் திமிரும் அகங்காரமும் சகிக்க முடியாதபடி இருந்தது. ஒருவருக்குப் பேசத் தெரியவில்லை என்பதற்காக அவரைப் போட்டு வறுத்தெடுப்பது அயோக்கியத்தனம். உடல் பலவீனமான ஒருவரை நாலு பேர் சேர்ந்து தாக்குவதைப் போல் செய்தார் ஊடக ரவுடி அர்னாப்… இது பற்றி செந்தில்நாதன் முகநூலில் எழுதியிருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இனி செந்தில் நாதன்:
திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi “தேசிய” ஊடகங்களி்ல் பேசிய முறை குறித்த சில விமர்சனங்கள் வருகின்றன. இருக்ட்டும்.
ஆனால் சிலசமயம் இப்படி எதிர்வினை புரியாவிட்டால் இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரமே கோசுவாமிகளுக்கும் சர்தேசாய்களும் பர்க்காதத்துகளுக்கும் தெரியவராது.
போட்டிப்போட்டுக்கொண்டு jingoist இந்திய தேசியவாதத்தை உருவாக்குவதுதான் இவர்களது பிரதான பிஸினஸ். ஆனால் கார்ப்பரேட்களிடம் நாட்டை விற்பதில் மட்டும் வேறு தர்க்கம் வேலைசெய்யும்.
இந்திய ஆளும் வர்க்கங்களுக்குள் பல பிரிவுகள் உண்டு. அமெரிக்கா போலவே இங்கும் மீடியா என்பதும் அதன் உள்பிரிவுகளி்ல் ஒன்று. இது மற்றவர்களுக்கான துணைவர்க்கம் மட்டுமல்ல, தனக்கேயான துணைவர்க்குமும்கூட.
மிகவும் ஆபாசமாக, அசிங்கமாக, முறையில்லாத, தொழில்தர்மமில்லாத, உலகின் மிகமோசமான “சாம்ராஜ்யவாத ஊடக கும்பல்” என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த என்டிடிவியும் அது போட்ட குட்டிகளின்கூட்டமும்தான்.
ஒரிஜினல் தேசியவாத விற்பன்னர்களான இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை செய்த அழும்புகள் படித்த மேடடுக்குடிகளிடமே தங்கிவிட, அர்னாப்கள் நமது வீட்டுக்கு வந்து குலைக்கிறார்கள்.
இவர்கள் மாற்றுக்கருத்துகள் உள்ளவர்களோடு உரையாடவோ பேசவோ வருவதில்லை. ரா, சிபிஐ, க்யூ பிரான்ச் அதிகாரிகள்கூட இப்படி கேள்விகேட்பார்களா, அசிங்கப்படுத்துவார்களா தெரியாது. ஆனால் அர்னாப் கேட்பார்.
ஊடக அறிவு என்பது இல்லாத நம் சமூகங்களில் இவர்களை எதிர்கொள்வது என்பது மிகவும்கடினம்தான். ஆனால் சில சமயங்களில் அவர்கள் பாணியையே பினபற்றி அவர்களை அடி்க்கவேண்டியிருக்கலாம். திருமுருகன் அதைத்தான் செய்தார் என நம்புகிறேன்.
Comments are closed.