கார்த்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியா என்று எழுதுவது தவறு என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Carthusia என்றால் தமிழில் கார்த்தூஸியா என்றே எழுத வேண்டும். ஏனென்றால், கார்தூஸியா என்று எழுதினால்
விவிலியம் படிக்காதவர்கள் Cardhusia என்று படித்து விடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் ஆசிரியர் தவறாக எழுதினாலும் எடிட்டர்தான் சரி செய்ய வேண்டும். இந்த இடத்தில் அரூ. குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கவில்லை. இன்று இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் இந்தக் கதையை வாசிக்கிறார். நானும் கலந்து கொள்வேன். வளன் என் மகன் என்பதால் அல்ல. அவன் எழுதிய யூதாஸ் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று என்பதால். அது மட்டும் குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்தால் ஸீரோ டிகிரி – தமிழரசியின் முதல் பரிசை அதுதான் வென்றிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறும்பட்டியலில் இடம் பெறாததால் இறுதிக் கட்ட நடுவர்கள் யாரும் அதைப் படிக்கவே வாய்ப்பு இல்லை. இன்று இரவு சந்திப்போம். ஃபாத்திமாவிடமிருந்து லிங்க் கிடைத்ததும் தனிப் பதிவில் அதை அறிவிக்கிறேன்.

கார்தூஸியர்களின் பச்சை மது | அரூ (aroo.space)