ஊங் சொல்றியா மாமா? (1)

நேற்று புஷ்பா என்ற படத்தைப் பற்றி சீனி பேசிக் கொண்டிருந்தார்.  அவர் போனை வைத்த கையோடு ஒரு வாசகி.  அந்தப் படத்தில் வரும் ஊங் சொல்றியா ஊஹுங் சொல்றியா மாமா என்ற பாடலைப் பற்றி வயிறெரியப் பேசினார்.  இன்றுதான் அந்தப் பாடலைக் கேட்டேன்.  எத்தனை ஆண்டுகளாக ஐட்டம் ஸாங் என்ற பதம் தமிழ் சினிமாவில் அறிமுகம் என்று தெரியவில்லை.  ஆரம்பத்தில் எனக்கும் சில ஐட்டம் சாங்ஸ் பிடித்துத்தான் இருந்தன.  ஆனால் எல்லோருமே – எழுத்தாளர்கள் உட்பட – ஜனரஞ்சகப் பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்பவர்களாக இருக்கிறார்கள்.  ஊறுகாய் பிடிக்கும் என்றால் ஊறுகாயையேவா சாப்பாடாகச் சாப்பிட முடியும்?  யாருக்கும் சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஈடுபாடே இல்லை.  என்னைப் போல், யுவன் சந்திரசேகரைப் போல் பழைய ஆட்கள்தான் சாஸ்த்ரீய சங்கீதப் பிரியர்களாகக் காணக் கிடைக்கிறோம். 

எல்லோருக்கும் கர்னாடக சங்கீதம் என்றால் இளக்காரமாக இருக்கிறது.  தமிழ் சினிமாவில் பிராமணர்களைக் கிண்டல் செய்வது போல கர்னாடக சங்கீதத்தை சகட்டு மேனிக்குத் துவைத்து எறிகிறார்கள்.  இதற்கிடையில் சித் ஸ்ரீராம் போன்றவர்கள் செய்யும் கூத்தும் சேர்ந்து கொள்கிறது.  ஏற்கனவே சீந்துவாரற்றுக் கிடக்கும் கர்னாடக சங்கீதத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையைச் செய்கிறார் சித் ஸ்ரீராம்.  அவர் பாடியிருக்கும் சம்பந்தப்பட்ட பாடல் எனக்குப் பிடித்திருந்தது என்று சொன்னாலே எல்லோரும் என்னை அடிப்பார்கள் போல் தெரிகிறது.  என் நண்பர் பிரபு கங்காதரன் “ரொம்ப இழுத்துப் பாடி விட்டார் தல, அதனால்தான் எல்லோரும் அடிக்கிறார்கள்” என்கிறார்.  கடவுளே, அந்த இழுப்புதான் ஐயா இப்போது கர்னாடக சங்கீதத்தை விட்டே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.  அதை ஆலாபனை என்று சொல்வார்கள்.  முன்னொரு காலத்தில் – அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்னே – ஏழு எட்டு மணி நேரமெல்லாம் ஒருத்தரே பாடிக் கொண்டிருந்தார்கள்.  இப்போதோ பெரிய பெரிய ஜாம்பவான்களே ஒரு மணி நேரக் கச்சேரிதான் செய்கிறார்கள்.  ஒரு மணி நேரக் கச்சேரி என்பது எனக்கு சுய மைதுனம் போல் தெரிகிறது.  ஆலாபனை முடியவே ஒரு மணி நேரம் ஆக வேண்டாமா தெய்வங்களே?  ஒரு கீர்த்தனையில் பத்து சரணம் இருந்தால் முதல் சரணத்தையும் கடைசி சரணத்தையும்தான் பாடுகிறார்கள். 

அதுவும் தவிர, தியாகராஜரின் 750 கீர்த்தனைகள் இப்போது கிடைக்கிறது என்றால் அதில் 30 கீர்த்தனைகளை மட்டுமே வைத்துக் கொண்டு பஜனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர் பாடிய மற்ற மாணிக்கங்களையெல்லாம் பாடுவதற்கே ஆள் இல்லை.  இந்த நிலையில் திருக்குறளை எடுத்துப் பாடுகிறார் நம் காலத்து நாயகர் என்ற பட்டம் பெற்ற ஒரு பாடகர்.  டி.எம். கிருஷ்ணா சேரிகளில் கர்னாடக சங்கீதத்தைக் கொண்டு சென்று இப்போது எங்கள் நடுக்குப்பத்திலேயே நாலு அரியக்குடியும் மூணு செம்மங்குடியும் ரெடி.  கிருஷ்ணாவுக்கும் மக்ஸேஸே கொடுத்தாயிற்று.  அடுத்து நோபல்தான் பாக்கி. 

இந்த நிலையில் இன்று காலை என் பிரியத்துக்குரிய லலிதா ராமின் பின்கண்ட குறிப்பைப் படித்தேன்.  சபாக்காரர்கள் இத்தனை “நட்பாக” நடந்து கொண்டால் எவன் சபா பக்கம் தலை காட்டுவான்?

இனி வருவது லலிதா ராம்:

Scene 1:

At a concert in the Mylapore Fine Arts Club.

Rasika: Sir, the violin is inaudible and the mridangam is extremely loud. Could you please balance the Audio.

Sound man: Go and complain in the office.

Rasika: What?

Soundman gestures the rasika to go away.

The earnest Rasika walks up to the office and finds a couple of mamas in their sixties having a hearty chat.

Rasika: Sir, could you please ask the soundman (it would be an insult to engineers if I call the guy a sound engineer) to balance the audio?

Mama 1: The audio is perfectly balanced.

while Mama 2 gives a look of disdain and goes back to his vettalai seeval.

Rasika: Sir, you just come and sit in the hall and you would know how unbalanced the sound it.

Mama 1: I have already answered you!

Rasika: But sir, aren’t you arranging these concerts for us Rasikas to enjoy it?

Now both Mamas are totally irked and as Mama 2 tries to talk the poor rasiks had to make an urgent retreat in order to save himself from the deluge of vettalai seeval.

Mama 1: Who told you we have these concerts for rasikas? We never asked you to come? It is upto you to listen to the concert or leave the hall.

Rasika: But…

Mama 2: One more word and I will call the watchman to escort you out!

The Rasika swears to never attend a concert in the hall again.

Scene 2:

Two young enthusiastic rasikas reach MFAC at 3.50 PM to attend a concert of a very good young but not a junior artist scheduled to start at 4.00 PM. The hall is sparsely crowded with a few hundred empty seats.

When the rasikas approach the ticket counter they are flatly refused tickets as the office bearer says all tickets are sold out.

Apparently the 6 PM concert was to be performed by a popular singer. Unfortunately entry for both concert demands the same ticket.

The two rasikas try to convince the office bearer to issue at least stage tickets so that they can attend the first concert and leave before the second concert.

While the office bearer vehemently denies entry, the singer recahes the venue. The rasikas are known to the singer. The singer is keen to help them out and requests the office bearer to issue tickets.

The office bearer is pissed off and lets out a loud shout, “Mama!”.

After three or four calls, a bispectacled mama emerges from the office.

The singer excuses himself out of the situation as he has only few mins to get ready.

The office bearer stops him, “Where are you running away now? Why don’t you show your power in front of the mama”, he yells.

The singer is embarassed and the rasikas offer to leave the hall and end the commotion.

The office bearer isn’t pacified and he continues to rant.

The mama, who has no clue about the situation, finally declares, “We will not call such singers next year.”

Scene 3

Hindu Businessline Paper date Jan 2 reports:

The past couple of years have been dull — if it was the floods in 2015, it was demonetisation in 2016. If the sabhas were looking for a comeback in 2017, they were left disappointed. “Unfortunately, it’s status quo,” Karthikeyan K, Treasurer of the 60-year-old Mylapore Fine Arts Club, told BusinessLine.

Most sabhas are seeing less than 70 per cent occupancy. While the increase in cost due to GST (tickets now come with an 18 per cent tax, against the earlier 15 per cent), is a part of the problem, not many sabhas were able to bring in prominent ‘crowd-pulling’ singers, due to dwindling sponsorship.

At Mylapore Fine Arts, sponsorship has fallen by more than half. “For example, if we had 15 sponsors last year, this year we had just five,” Karthikeyan said.