சற்று நேரம் முன்புதான் ஔரங்கசீப் 81-ஆவது அத்தியாயம் எழுதி முடித்தேன். பத்துப் பன்னிரண்டு மணி நேர ஆழ்நிலை தியானத்திலிருந்து பிரக்ஞை பெற்று எழுந்தது போல் இருந்தது. பற்களின் ஈறுகளில் கூட மின்னணு பாய்வது போல் இருந்தது. எட்டு ஒன்பது பெக் ரெமி மார்ட்டின் அருந்திய பிறகு ஒரு இழுப்பு மரியுவானாவை இழுத்தது போல் ஒரு மிதப்பு. வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்திருப்பதையே உணர முடியவில்லை. அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது.
இந்த உணர்வினால்தான் – இந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல்தான் சில எழுத்தாளர்களுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது போல. சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த மனநிலையைத் தாங்க முடியாமல்தான் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி எப்போதும் குடித்துக் கொண்டே இருந்தார் என்று நினைக்கிறேன்.
எனக்கு இசை.