ஆனி எர்னோ

நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்த தோழியிடமிருந்து வந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு ஃபோன் செய்து கேட்ட போது ஃப்ரீக் கால் என்றாள்.

2. ஆனி எர்னோவின் நாவல் ஒன்றின் முதல் அத்தியாயம் அச்சு அசலாக ஸீரோ டிகிரியின் முதல் அத்தியாயம் போலவே இருக்கிறதாம். ஆனால் அது பற்றி நான் ஒன்றும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஆனி எர்னோவின் அந்த நாவல் 1960களிலேயே வந்து விட்டதாம்.

3. அபிலாஷ் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த ஆனி எர்னோவின் இரண்டு பத்திகளைப் படித்தேன். எக்ஸைல் நாவலிலிருந்து உருவியது போல் இருந்தது.

ஒன்றும் சொல்வதற்கில்லை.