உண்மையான காதல்

ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ள நாவல். அராத்து எழுதியது. ரேமண்ட் கார்வரின் ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. எனக்கு ரெமண்ட் கார்வரின் கதைகள் – இதுவரை நான் படித்தவற்றில் இருந்து பார்த்த போது – குப்பைக் கூளம். இத்தனை குப்பையான கதைகளை எழுதிய ஒருவரை என்னால் ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள முடியாது, அவர் இதை விட நல்ல கதைகள் எழுதியிருந்தாலும். அராத்துவின் கதையும் எனக்குப் பிடிக்கவில்லை. முதல் முதலாக அப்படி நடந்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அராத்துவின் கதையை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்து விட்டேன். உந்துதல் அராத்துவின் இந்த நாவல்தான். அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு என்ற அந்த நாவலைத்தான் ராப்பகலாக இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நாவலுக்காக மீண்டும் பல பிரேதங்களின் மீது நடந்து கொண்டிருக்கிறேன். ஆட்டோஃபிக்‌ஷன். சரி, அராத்துவின் நாவலைப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கைத் தட்டி நாவலை வாங்கிப் படிக்கலாம்.

https://rzp.io/l/truelove

உண்மையான காதல்