அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்புள்ள சாருவுக்கு,

அன்பு நாவல் ஒரு அகோர தாண்டவம்..உருத்திர மூர்த்தியாய் அப்படி ஒரு ஆட்டம் நாவல் முழுவதும்… இருப்பினும் நாவலின் மையச்சரடு அன்பின் சீரான கோர்வையைப் பற்றிக் கொண்டே செல்கிறது.

நாவல் உணர்த்தும் பொருள் பிரதியில் முழுதாய்ப் பொதிந்துள்ளது.. இதனுள் முத்துக் குளித்தால் தரிசனம் கிடைக்கப் பெறலாம்…கிடைக்கும்…
மிலரப்பாவின் கதை மரகத மாணிக்கம்…

விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்ல..
ஒரு 300பக்க நாவல் இவ்வளவு வேகமாக நான் படித்ததே இல்லை. போனில் படித்தால் கண் எரிகிறது என்று எப்போதும் புத்தகங்களையே வாங்கிப் படிப்பேன். ஆனால் இந்த நாவல் எல்லாவற்றையும் காட்டாற்று வெள்ளமாக அடித்து துவம்சம் பண்ணி விட்டது.

முடித்து விட்டேன். இந்த நாவல்தான் உங்களின் ஆகச் சிறந்த படைப்பு என்று சந்தேகமில்லாமல் சொல்வேன்.

இவ்வளவு பரபரப்பான நாவலாக இருந்தாலும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக வரும் செளந்தரின் தியானத்தால் உள்ளுர ஒரு பேரமைதி பரவுவதை அனுபவம் கொள்கிறேன்.

நன்றி

ச்சிண்ட்டூ

😘

நாவல் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் வெளி வந்து விடும். அட்டைப்படத்துக்காகத்தான் காத்திருக்கிறோம். பிடிஎஃப்பை நான் இன்னும் இரண்டொரு தினங்கள் மட்டுமே அனுப்ப முடியும்.

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு – Charu Nivedita (charuonline.com)