எக்ஸிஸ்டென்ஷியல் ஃபுட்பால்

எதற்குமே அசையாமல் தொலைக்காட்சியே பார்க்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்த நான் உலகக் கால்பந்தாட்டப் போட்டிக்காக பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  தினமும் இரவு ஒன்பதரையிலிருந்து பதினொன்றரை வரை.  இரவு பத்துக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுவதுதான் எனக்கு இயல்பாக இருக்கிறது.  இப்படி நள்ளிரவில் படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்தால் பிறகு நாள் பூராவும் ஏதோ கஞ்சா அடித்தது போல் கிறக்கமாக உள்ளது.  அதே ஆறு மணி நேரம்தான்.  ஆனால் தேக லயம் கெட்டு விடுகிறது.  கால்பந்தாட்டம் பற்றிய செம நகைச்சுவை காமிக்ஸ் ஒன்றை ராஜேஷ் அனுப்பியிருந்தார்.  ஃபுட்பாலும் தெரிந்து ஐரோப்பியத் தத்துவ மரபும் தெரிந்திருந்தால் அட்டகாசமாக ரசிக்கலாம்.  ஃபூக்கோ, கம்யு இருவரையும் ரொம்பவே ரசித்தேன்.  கார்ல் மார்க்ஸ் பாவம்.  நம் அ. மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை அளவுக்குப் பண்ணியிருக்கிறார்கள்.  பயங்கரமான காமிக்ஸ் விளையாட்டு.

http://existentialcomics.com/comic/35

Comments are closed.