பன்னிரண்டாம் தேதி கோழிக்கோடு வந்து பதின்மூன்றாம் தேதி இரண்டு அமர்வுகளில் கலந்து கொண்டு பதினான்காம் தேதி மாலை சென்னை திரும்பும் திட்டத்தில் சிறிய மாற்றம்.
பத்தாம் தேதியே கோழிக்கோடு கிளம்புகிறேன். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று ஆகிய நான்கு இரவுகள் கோழிக்கோட்டில் இருப்பேன். பதினான்கு மாலை சென்னை கிளம்புகிறேன்.
கோழிக்கோட்டில் மலபார் கேட்டில் உள்ள லெமன் ட்ரீ ஓட்டலில் தங்கியிருப்பேன். இது பத்து, பதினொன்று இரண்டு தினங்கள் மட்டுமே. பன்னிரண்டாம் தேதியிலிருந்து கேரள இலக்கிய விழாவினர் தரும் ஓட்டலில் தங்குவேன்.
ஆகவே, சென்னை புத்தக விழாவுக்கு ஒன்பதாம் தேதி வரைதான் வருவேன். அதன் பிறகு பதினைந்தாம் தேதியிலிருந்து விழா முடியும் வரை தினமும் மாலையில் வருவேன்.