மேற்கண்ட தலைப்பில் பேசியதை கொஞ்ச நாளில் விரிவாக ஒரு கட்டுரையாக எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் கட்டுரையாக எழுதினால் எந்த விவாதமும் வராது. பேசினால் வரும்.
சமீபத்தில் நான் பேசிய இரண்டு உரைகள் பற்றி ஒரு கடிதம்:
வணக்கம் சாரு
புத்தகத் திருவிழாவில் நீங்கள் இன்று பேசிய உரையைக் கேட்டேன். இனிமேல், “எனக்கு மேடையில் பேச வராது” என்று எங்கும் கூறாதீர்கள். உங்களின் வேறு சில உரைகளையும் கேட்டுள்ளேன். அவற்றுள் இன்றைய பேச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது. இன்றைய பேச்சில் நீங்கள் உங்கள் கன்ட்ரோலிலேயே இல்லை. எழுத்தில் காணக்கூடிய உங்களின் வெறியாட்டத்தை இன்றைய பேச்சில் காண முடிந்தது. மேட்னஸைப் பற்றி பேசிய உங்கள் பேச்சிலேயே ஒரு மேட்னஸ் இருந்தது. உங்களின் கையசைவுகள், முன்னே இருப்பவரைப் பிடித்து ஆவேசமாக உங்களை நோக்கி இழுத்துப் போடுவது போன்றிருந்தது. மிகையாக எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன்.
த.செந்தமிழ்
உரைகளின் லிங்க்: