இதே தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடரவும்.
முந்தைய கட்டுரை:
எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – Charu Nivedita (charuonline.com)
அந்தக் கட்டுரையில் சொல்ல மறந்த இன்னொரு விஷயம் இது: சென்ற வாரமோ என்னவோ நான் சீலே செல்வது பற்றியும், அதற்குத் தேவையான பணம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவர் கூட – ஆம், ஒருவர் கூட – ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை.
ஆனால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீலே சாந்த்தியாகோவில் இருந்து கொண்டு எழுதினேன். ஒரே வரிதான். சாந்த்தியாகோவில் இருக்கிறேன். ஐந்து லட்சம் பணம் வேண்டும். இருந்தால் சீலே முழுவதையும் சுற்றிப் பார்ப்பேன். இல்லாவிட்டால் கையில் இருக்கும் கொஞ்சக் காசை வைத்துக்கொண்டு சாந்த்தியாகோவை மட்டும் சுற்றிச் சுற்றி வருவேன்.
இரண்டு மூன்று தினங்களில் ஆறு லட்சம் ரூபாய் வந்தது. அனுப்பியவர்கள் ஐம்பது ஆயிரத்துக்குக் குறையாமல் அனுப்பினார்கள். அவர்களில் யாரையுமே எனக்குத் தெரியாது. அவர்கள் பெயரே புதிதாக இருந்தது. பணம் அனுப்பிய பிறகும் அவர்கள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் நன்றி சொல்லி அனுப்பிய மின்னஞ்சலுக்கும் எந்தப் பதிலும் இல்லை.
ஆனால் சென்னையில் இருந்து கொண்டு சீலே போகிறேன், பணம் தாருங்கள் என்றால் ஒரு பைசா வரவில்லை. இது எல்லாமே மனிதர்களின் உளவியல் சார்ந்த விஷயம் என்று நினைக்கிறேன். நான் சீலே செல்வது உல்லாசப் பயணம் அல்ல. தெ அவ்ட்ஸைடர் என்ற என்னைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் இது ஒரு ஹாலிவுட் த்ரில்லர் போல் இருப்பதாக அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு காட்சியில் பாங்காக்கில் இரண்டு ட்ரான்ஸ்ஜெண்டர்கள் கத்தியை வைத்துக் குத்திக்கொண்டு சண்டை போடுகிறார்கள். சாலையில் ரத்த வெள்ளம். உண்மையாகவே ரத்த வெள்ளம். நான் அவர்களின் குறுக்கே பாய்ந்து சண்டையை விலக்கப் பார்க்கிறேன். கேமராமேன் என்னைத் தடுக்காமல் இதைப் படமாக்கி வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சீலேவும் வர வேண்டும் என்று நான் மட்டும் அல்லாமல் நண்பர்களும் கருதுகிறார்கள். இந்தப் படப்பிடிப்புக்குத்தான் பணம் தேவை. ஐந்து லட்சம் தேவை.
படப்பிடிப்பு சீலேயின் வடக்கே உள்ள அத்தகாமா (Atacama) பாலைவனத்தில் நடக்க இருக்கிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வேற்றுக்கிரகப் படங்களெல்லாம் இந்த அத்தகாமா பாலைவனத்தில்தான் எடுக்கப்படுகின்றன. நூறு ஆண்டுகளாக ஒரு சொட்டு மழை பெய்யாத ஒரே பாலைவனம் இந்த உலகிலேயே அத்தகாமாதான். அங்கே உள்ள ஒரே ஒரு கிராமத்தில் ஐநூறு பேர் வாழ்கிறார்கள். கடல் உண்டு. ஆனால் குடிநீர் கிடையாது. அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அத்தகாமா பாலைவனம் உள்ள வடக்கு மாநிலத்தில்தான் பாப்லோ நெரூதா நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அத்தகாமா பற்றி அவர் தன் சுயசரிதையில் ஏராளமாக எழுதியிருக்கிறார்.
சென்ற முறை சென்ற போது நான் அத்தகாமா செல்லவில்லை. செல்வதற்குப் பணம் இருந்தும் நாள்கள் இல்லை. துணைக்கு ஆளும் இல்லை. தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் என் வழிகாட்டியோடு செல்லத் தயக்கமாக இருந்தது. அவர் தண்ணீரே குடிக்காமல் நாள் பூராவும் வைன் குடித்துக்கொண்டு இருபது வயது ஆள் மாதிரி திரிகிறார். அவருக்கும் என் வயதுதான். செயின் ஸ்மோக்கர் வேறு. ஆனால் 100 மீட்டர் ரேஸில் ஓடுவது போல் நடக்கிறார். அவரோடு சென்றால் தாங்காது என்றுதான் போகவில்லை. அவரால் வாழ்நாள் பூராவும் அரிசிச் சோறு தின்றவனின் சரீரத்தைப் புரிந்து கொள்ள இயலாது. அவர் செங்கல் செங்கல்லாக ஸ்டேக்கை (மாட்டுக்கறி) விழுங்குகிறார். நானோ அதில் ஒரே ஒரு ஸ்பூனைக் கடியோ கடி என்று கடித்துத் தின்று விட்டு பட்டினி கிடந்தேன்.
இந்த முறை நண்பர்கள் இருப்பதால் செல்லலாம் என்று இருக்கிறேன். வண்டியில் கேன் கேனாக தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் சாந்த்தியாகோவில் தண்ணீர் கிடைக்காது. அதைத் தேடிப் பிடிக்கத்தான் நண்பர்கள் பலம்.
எல்லாவற்றையும் ஆவணப்படத்தில் சேர்த்து விடுவோம். ஐந்து லட்சம் தேவை. உதவுங்கள்.
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai