அண்ணா நூலகத்தில் நான் ஆற்றிய உரையை ஒரு வாரத்தில் பதினோராயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்போதைய காலகட்டம் துரிதங்களுக்கானது. அண்ணா நூலகத்தில் நான் பேசிய ஒன்றரை மணி நேர உரையில் ஒரே ஒரு நிமிடத்தை எடுத்து, அதற்குப் பின்னணி இசை கொடுத்து யாரோ ஒரு நண்பர் ரீல்ஸில் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் 80000 பேர் பார்த்திருக்கிறார்கள்.
அதன் லிங்க் இது: https://www.facebook.com/share/r/9LHi7HiY1Tsi3CcX/?mibextid=MeSgDu
அண்ணா நூலகத்தில் உலக சினிமா குறித்து நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக வருகின்ற ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒரு பயிலரங்கை நடத்த இருக்கிறேன். உலக அளவில் பேசப்படக் கூடிய சுவாரசியமான நல்ல திரைப்படத்தை உருவாக்குவது எப்படி என்பதுதான் பயிலரங்கின் நோக்கம். குறைந்த பட்ச நன்கொடை ரூ.2000/-
பயிலரங்கில் கலந்து கொள்ள இதுவரை இருபது பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்தப் பயிலரங்கு குறித்த செய்தி என் வாசகர் வட்டத்தை விட்டுத் தாண்டவில்லை என்று தெரிகிறது. பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். நன்கொடைப் பணத்தை ஜூன் 30 அன்று நேரிலும் செலுத்தலாம்.
charu.nivedita.india@gmail.com