திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஜூன் 30ஆம் தேதி காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொள்ள இதுவரை 85 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே பெண். அதிலும் அவர் அமெரிக்காவில் பணி புரிகிறார். இந்தியாவிலிருந்து ஒரு பெண் கூட இல்லை.
இப்படித்தான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வருகிறேன். பெண்களிடம் பணம் இல்லையா? வர விருப்பம் இல்லையா? அல்லது, இன்னமும் குடும்ப அடிமையாக வாழ்கிறார்களா?
எனக்கு இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்திய நகரங்களில் உள்ள பப்களில் பார்த்தால் பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது. குடி குடியென்று குடிக்கிறார்கள். புகைத்துத் தள்ளுகிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் இம்மாதிரி கலாச்சார நிகழ்வுகளில் காணவே முடியவில்லை. சரி, பெண் எழுத்தாளர்களின் நிலை என்ன? சாரு என்ற ”ஆண்” எழுத்தாளனிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவுமே இல்லை என்று நினைத்து விட்டார்களா?
பெயர் கொடுத்த இரண்டு மாணவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். ஒருவர் வேத பாடசாலையில் படித்தவர். என் தீவிர வாசகர். இன்னொருவர், சம்ஸ்கிருதக் கல்லூரியில் மாணவர். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? மற்றபடி மாணவர் சமூகத்திடமிருந்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. எல்லோரும் ரீல்ஸில் அஜய் நேஹா பார்த்து குதூகலித்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.
சிங்களவர்கள் இப்படி இல்லை. நான் சிங்களத்தில் உலக சினிமா பற்றிப் பயிலரங்கம் நடத்தி, அதற்கு 82 பேர் பெயர் கொடுத்திருந்தால், 50 பேர் பெண்களாகவும் மீதிப் பேர்தான் ஆண்களாகவும் இருக்கிறார்கள். எந்தக் கலாச்சார நடவடிக்கையிலும் பெண்களின் எண்ணிக்கையே அங்கே அதிகமாக இருக்கிறது. தமிழில் ஒருத்தர் கூட இல்லை, பெயர் கொடுத்த ஒருவரும் அமெரிக்காவில் பணி புரிகிறார். இந்த நிலை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது.
வர விரும்புவோர் ஜீபே செய்ய: 92457 35566
UPI ID charunivedita@axisbank
கட்டணம்: 2000 ரூ. மாணவர்களுக்கு: 1000 ரூ.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com