தன்னுடைய Minxie நாவலின் ஆங்கிலம் தமிழ் மாதிரி, அல்வா மாதிரி மனதில் போகும் என்று நூற்றுக்கு முந்நூறு முறை சொல்கிறார் அல்லவா அராத்து? அதைப் பார்த்ததும் எனக்கு நானும் ஸ்ரீயும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் மொழி ஞாபகம் வந்தது. அந்த நாவல் எலீட் வாசகர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. மிகக் கடினமான ஆங்கிலமாக இருக்கும். வேண்டுமென்றே கடினமான ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்படி நினைத்து எழுதவில்லை அல்லவா? பெட்டியோவின் தமிழ் எப்படி இருந்தது? அப்படி ஒரு தமிழ் தமிழின் நவீன இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? ஸீரோ டிகிரியில் கூட இல்லை. அப்படிப்பட்ட ஆங்கிலத்தில்தான் அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் உருவாகி வருகிறது. எப்படியும் நாவல் தமிழிலும் வரும். ஜாய்ஸியன் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடிந்தவர்களே அனாடமியைப் புரிந்து கொள்ள முடியும். மொழி சாமுவெல் பெக்கட் மாதிரி இருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னதால் பெக்கட்டை எடுத்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் படித்தேன். இன்னும் படிக்க வேண்டும். இடையில் ஆயிரத்தெட்டு வேலைகள்.
அனாடமியைப் பொறுத்தவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களை மிரள வைக்க வேண்டும் என்பதே நோக்கம். மற்றபடி தியாகராஜா, ராஸ லீலா எல்லாம் ஆங்கிலத்தில் லகுவாகத்தான் இருக்கும்.
அனாடமியில் வரும் ஒரு பத்தி இது. சும்மா ஒரு ஸாம்பிள். உள்ளே படு பாதாள பைரவியெல்லாம் இருக்கிறது. ஒரு ஆண்டு காத்திருக்கவும்.
In that sense, there is no folly in laying bare my thoughts upon these pages. Whether or not it safeguards me from teetering on the brink, it grants me a fleeting reprieve—like a gasp of air to one submerged in a fathomless abyss. And for that ephemeral solace alone, I feel bound to write. Yet, I find myself stranded without a compass or star, clueless as to what to pen or where to commence. Still, I have taken a quiet plunge into the unknown. Thus began my dalliance with these diary entries.