உதவி வேண்டும்…

என்னுடைய பெட்டியோ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.  அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன்.  மொழிபெயர்ப்பாளருக்கு நான் இரண்டரை லட்சம் கொடுக்க வேண்டும்.  அதில் ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன்.  மீதி கொடுக்க வேண்டும்.  வாசக நண்பர்களிடம் கேட்டேன்.  இருபதாயிரம் வந்தது.  கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம்.  கிடைத்தது இருபதாயிரம்.  ஒரு இருபது நண்பர்களுக்கு இது பற்றி நான் எழுதியிருந்த வேண்டுகோளை வாட்ஸப்பில் அனுப்பினேன்.

யாரிடமிருந்தும் பதில் இல்லை.  பணமும் வரவில்லை.  ஒரே ஒரு நண்பர் பதில் எழுதினார்.  “நான் ஒரு பிச்சைக்காரன்.  நீங்கள் எனக்கு ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் உங்கள் பெயரைச் சொல்லி ஒரு வேளை சாப்பிட்டு நீங்கள் நூறாண்டு வாழுங்கள் என வாழ்த்துவேன்.”  நண்பர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்.  இருந்தும் அவர் நிலை இப்படி இருக்கிறது.  

அமெரிக்க நண்பர்களிடமிருந்து ஒரு டாலர் கூட வரவில்லை.  அமெரிக்க நண்பர்கள் நான் காசு கேட்டு எழுதுவதை விமர்சித்தார்கள் என கேள்விப்பட்டேன்.  

இதில் என்னை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.  நான் சினிமாவுக்கு எழுதினேன் என்றால் எக்கச்சக்கமாகக் காசு வரும்.  எனக்கும் எழுத ஆசைதான்.  ஆனால் இந்த ஜென்மத்தில் என்னை சினிமாவுக்கு எழுத அழைக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு சினிமா மனிதர்களை நான் விமர்சித்திருக்கிறேன்.  சமீபத்தில் கூட பாருங்கள், தக் லைஃபைப் போட்டுக் கிழிகிழியென்று கிழித்திருக்கிறேன்.  மணி என்னை அழைப்பாரா?  அல்லது கமல்தான் அழைப்பாரா?  அதிலும் சினிமா மனிதர்களை தமிழர்கள் கடவுள் ரேஞ்ஜுக்கு வைத்திருக்கும் நிலையில் நான் இப்படிப் போட்டுக் கிழித்தால் அவர்கள் மனம் என்ன பாடு படும்?  எனவே சினிமா மூலமாக எனக்குக் காசு வரும் வாய்ப்பே இல்லை.  காசுக்காக என்னால் சினிமாக்காரர்களுக்கு ஜால்ரா அடிக்க முடியாது.  இது பற்றி நீங்கள் அனைவரும் என்னைப் பாராட்ட வேண்டுமே தவிர என்னை விமர்சிக்கக் கூடாது.  

அடுத்து, நான் உங்களிடம் காசு கேட்பதன் காரணம், தமிழர்கள் புத்தகம் படிக்காததுதான்.  பல நாடுகளில் ஒவ்வொரு புத்தகமும் லட்சம் பிரதிகள் விற்கின்றன.  ஜப்பானில் கோடியில் விற்கிறது.  அதன் காரணமாக, அங்கே எழுத்தாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.  தீவையே விலைக்கு வாங்கி அங்கே இருந்து எழுதுகிறார்கள்.  நம் நாட்டில் தீவை விலைக்கு வாங்கக் கூடியவர்கள் காவி கட்டியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  நான் எழுத்தை விட்டு விட்டு ஆங்கிலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பித்தால் ஒரே ஆண்டில் நான் கோடீஸ்வரன்.  எனக்குக் கிடைக்கும் ராயல்ட்டி 1,20,000/-  ஒரு ஆண்டுக்கான ராயல்ட்டி இது.  ஆக, என் மாத ஊதியம் பத்தாயிரம் ரூபாய்.  இந்த நிலையில் நான் காசு கேட்காமல் என்ன செய்ய முடியும்?  

என் எழுத்து வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்குக் கிடைத்த வரவேற்பை நீங்கள் அறிவீர்கள்.  இந்தியாவின் மிகச் சிறந்த ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ஸீரோ டிகிரி.  அந்த ஐம்பது நூல்களைத் தேர்வு செய்தது ஒரு விமர்சகர்கள் குழு.  வெளியிட்டது ஹார்ப்பர் காலின்ஸ்.அடுத்து ஔரங்ஸேப் க்ராஸ்வேர்ட் விருதைப் பெற்றது.  இப்படி நான் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்.  

பெட்டியோ ஆங்கிலப் பிரதியை வாசித்த ஒரு பெண், “இதை ஒரு ஆண் எழுதியதாக நம்பவே முடியவில்லை, ஒரு ஆடவனால் இதை எழுதியிருக்கவே முடியாது” என்றார்.  

மேலும், நான் உங்களிடம் என்ன ஓசியிலா கை நீட்டுகிறேன்?  என் எழுத்தைத் தருகிறேன்.  உங்களால் இயன்றதைத் தாருங்கள் என்று கேட்கிறேன்.  இதில் என்ன தவறு காண்கிறார்கள்?  சங்கீத மேதையான தியாகராஜரே உஞ்சவிருத்தி எடுத்துத்தானே வாழ்ந்தார்?  அப்புறம் நான் பிச்சை எடுக்கும்போது மட்டும் ஏன் என்னை விமர்சிக்கிறார்கள்?  இது ஒரு சமூக அவலம் என்பது உங்களுக்குப் புரிய வேண்டும்.  எழுத்தாளனின் நூல்கள் லட்சக்கணக்கில் விற்றால் யாரும் இங்கே பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இராது.  

பெட்டியோ மொழிபெயர்ப்பாளருக்கு இன்னும் இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும்.  தயவுசெய்து உதவுங்கள்.  

பணம் அனுப்புவதற்கு விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai