ஒரு பெண்ணைக் காதலித்தேன்
அவள் குலத்தில் சீரகத்துக்குத் தடை
அடிமைக்கு வேறென்ன கதி?
சீரகத்தைத் துறந்த நான் பட்ட
அபானவாயுவின் அவஸ்தையை
அகிலமே அறியும்
அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகு
வந்த பெண் முருங்கைக்காய்க்குத் தடையென்றாள்
முன் தோன்றி மூத்த தமிழ்க் குடிக்கோ
முருங்கைக்காய் கலாச்சார அடையாளம்
ஆனாலும் அடிமைக்கு வேறு புரிதல் உண்டா?
முருங்கைக்காயை விட்டேன்
அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகு
வந்த பெண் பாலுக்குத் தடையென்றாள்
கருப்புக் காப்பிக்குத் தாவினேன்
பால் கோவா, பால் பாயாசம், பால் சர்பத்
சகலமும் துறந்தேன்
ஆனாலும் பாலியல் எழுத்தாளன் என்ற
அடையாளம் ஒட்டிக்கொண்டே வந்தது
அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகு
வந்த பெண் முத்தத்துக்கு மறுப்பு தெரிவித்தாள்
முத்தம் எச்சிலாம், சாதி விதிகளாம்
எழுபது வயதில் முதல் முத்தம் கிடைத்தது,
எச்சிலைத் தாண்டி, உதடுகள் பேசியதெல்லாம் தனிக்கதை
அந்த ப்ரேக்கப்புக்குப் பிறகு
வந்த பெண் தனக்கு செக்ஸில் ஈடுபாடில்லை
என்கிறாள்
ஏசெக்ஷுவலா என்றேன்
இல்லையில்லை, எட்டாதாயின் சட்டென மற என்றாள்
ஏணி வைத்தால் எட்டுமே என்று கேட்க
நினைத்து, கேட்கவில்லை
என்ன, இவளையும் ப்ரேக்கப்
பண்ணுவதா?
அலுத்து விட்டது இறைவரே,
எத்தனை சைத்தான்களிடம் மாட்டுவது?
எத்தனை விஷயத்தைத் தடை செய்வது?
எத்தனை ப்ரேக் அப் பண்ணுவது?
அசரீரி: என் படைப்பின் அற்புதத்தை
சைத்தானென்றா சொல்கிறாய், மூடனே?
அசரீரியாய் வந்து வையாதீர், ஐயனே
சைத்தானில்லை, தேவதையெனத் தெரியும்
ஆனாலும்
அடிமைக்கு ஆண்டான் சைத்தான்தானே?
இந்த ஸைக்காலஜி தெரியாமல் நீரெப்படி
இத்தனை பெரும் அண்டத்தைப் படைத்தீர்?
சரி இறைவரே,
வேறொன்றும் வேண்டாமெனக்கு
அடுத்த பிறவியில் நான் ஆணெனில்
கூடவே ஒரு புஸ்ஸியை
என்னுடம்போடு ஒட்டி அனுப்பும்
பெண்ணினத்தையே
வெறும் புஸ்ஸியாய்ப் பார்க்கிறேன்
எனப் பதறாதீர் இறைவரே!
இல்லாத ஒன்றின் மேல்
கொண்ட இச்சையென எடுத்துக் கொள்ளும்
என் அண்ணனொருத்தன்
பிறந்த இடத்தை நாடும் பேதை மனமெனப்
பாடினான் என்பதையும் ஞாபகம் கொள்வீர்
அடுத்த பிறவியில்
பெண்ணாக எனைப் படைத்து விட்டால்
கவலையில்லை, தொடை விரித்தால்
வந்து விழும் அடிமைகள்
தொண்ணூறாயிரம்…
So, dear God, kindly consider this fool’s pathetic plea, yeah?