மரப்பாச்சி பொம்மைக்கு
சீலை கட்டி
தலை வாரி
சடை பின்னி
பால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்
ஒருத்தி சொன்னாள்:
”ஏய் மூடத்தி
அது வெறும் மரக்கட்டை
அதற்கு உயிரில்லை.”
அன்றிலிருந்து
மனநலம் குன்றினாள் சிறுமி
ஒருவன் தன்னை
ஞானியென சொல்லி வந்தான்
ஒருத்தி அவனிடம்
“அனுபவத்தில் சொல்கிறேன்
நீ ஞானியல்ல
பைத்தியம்” என்றாள்
அன்றிலிருந்து
பைத்தியமானான் ஞானி