the same inside : Anna Swir

இந்தக் கவிதையை ஸ்ரீ அனுப்பியிருந்தாள். படித்ததும் உடனே மொழிபெயர்க்கத் தோன்றியது. தலைப்பை மட்டும் அப்படியே விட்டு விட்டேன். கீழே என் மொழிபெயர்ப்பு:

ஒரு காதல் கொண்டாட்டத்துக்கு
உன் இடம் நோக்கி நடந்தேன்.
தெருமுனையில் ஒரு வயதான பிச்சைக்காரியைக் கண்டேன்.
அவள் கையைப் பற்றினேன்
அவளது மென்மையான கன்னத்தில் முத்தமிட்டேன்.
நாங்கள் பேசினோம்; அவள் உள்ளுக்குள்
என்னைப் போலவே இருந்தாள்
நாய் நாயை மோப்பத்தால் அறிவது போல்
நான் இதை உடனே உணர்ந்தேன்.

அவளுக்குப் பணம் கொடுத்தேன்,
அவளைப் பிரிய மனமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக,
நமக்கு ஒரு நெருக்கமானவர் தேவை அல்லவா?

பிறகு, நான் ஏன்
உன் இடம் நோக்கி நடந்தேன்
என்றே தெரியவில்லை.