இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை பஞ்ச ரத்னா கீர்த்தனைகளில் ஒன்று எனச் சொல்லி விட்டேன். அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டி வந்துள்ள கடிதம் கீழே. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இசையில் எனக்கு ரசனை அனுபவம் மட்டுமே உண்டு. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடல் ஒலித்த திராவிட குடும்பத்தைச் சேர்ந்தவன் வேறு. அதனால் பிழைகளுக்குப் பஞ்சமிருக்காது. ஏன் திராவிடக் குடும்பம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், பிராமணக் குடும்பம் என்றால் நமக்கு இசையில் நாட்டமில்லாவிட்டாலும் வீட்டின் ஒரு மூலையில் யாரோ ஒருத்தர் சங்கீதம் கற்றுக் கொண்டிருப்பார். நம் செவிகளில் அது விழுந்துகொண்டே இருக்கும்.
இப்படி பஞ்சரத்னா கீர்த்தனைகள் என்ன என்று கூடத் தெரியாதவன் தியாகராஜரைப் பற்றி ஒரு நாவல் எழுத வந்து விட்டானே என்று கூட இந்நேரம் பரவலாக விமர்சனம் வந்திருக்கும். திரும்பவும் சொல்கிறேன். நாவலில் பிழை இருக்காது. சரியானபடி பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாம் செய்த பிறகுதான் நாவல் வெளிவரும். தியாகராஜர் பற்றி சாரு என்ன எழுதி விட முடியும் என்று கேட்கும் அன்பருக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். தியாகராஜர் 96 லட்சம் தடவை ராமநாமம் ஜெபித்து விட்டார். ராமன் வரவில்லை. ஏன் வரவில்லை, ஏன் என்னை இப்படி வதைக்கிறாய் என்று கேட்டு கீர்த்தனை மழை பொழிந்தும் ராமன் வரவில்லை. தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றி மட்டுமே என்னால் நூறு பக்கம் எழுத முடியும். அதற்கு இசை ஞானம் தேவையில்லை. இலக்கியம் தெரிந்தால் போதும். அதேபோல் ஒரு கட்டத்தில் தியாகராஜர் ராமனையும், சீதையையும், ஹனுமனையும் பார்க்கிறார். தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றியும் ஒரு நூறு பக்கம். சர்ஃபோஜி மன்னர் தியாகராஜரின் உஞ்சவிருத்திப் பையில் பொற்காசுகளைப் போடச் சொல்லி சிப்பந்தியை அனுப்புகிறார். சிப்பந்தியும் மன்னர் சொன்னபடி செய்கிறான். வீட்டுக்குள்ளே வந்து பைக்குள் பொற்காசுகள் இருக்கக் கண்டு அதைத் தெருவில் கொண்டு போய் போட்டு விட்டு வந்த தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றி ஒரு இருநூறு பக்கம் எழுதலாம்.
இப்போது பிழை பற்றிய கடிதம். என் கட்டுரையில் பிழைகள் இருந்தால் (நிச்சயம் இருக்கும்) உடனடியாகத் திருத்தலாம். எனக்கு எழுதலாம். இந்த விஷயத்தில் உங்கள் யாருக்கும் தயக்கமே வேண்டாம். முன்பு நான் ஏன் கோபமாகவும், தூஷணை வார்த்தைகளிலும் எழுதினேன் என்றால், தியாகராஜர் பற்றி சாரு எழுத என்ன இருக்கிறது என்று கேட்டதால்தான். தமிழ்க் கலாச்சாரத்துக்கு வெளியே இருக்கும் வெள்ளைக்காரரான ஜாக்ஸன் எழுதலாம், 55 ஆண்டுக் காலம் சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கும் நான் எழுதக் கூடாதா என்ற கோபமே அந்த எதிர்வினைக்குக் காரணம். என் அளவுக்கு ஒரு எருமை சங்கீதம் கேட்டிருந்தால்கூட அந்த எருமைக்கு சங்கீத ரசனை வந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
RESPECTED AND DEAR CHARU,
adiyen abhivaathanam and namaskarams.
This is the first letter adiyen is writing to you, after going through your blog from 2014….i require your pardon for differing from you in your Sept.29th art Swara Raaga Sudha Rasa….adiyen kindly wish to suggest the following lines for your kind consideration…
The Pancharatna Kritis by Saint Thyagaraja are a set of five famous songs in Carnatic music: Jagadanandakaraka, Dudukugala Nanne, Sadhinchene, Kanakana Ruchira, and Endaro Mahanubhavulu. These compositions are notable for being set in the five Ghana Ragas, which are Nata, Goula, Arabhi, Varali, and Sri, respectively
if you find this letter wrong or arrogant,
kindly KSHAMA KARNA please
NAMASKARAM
S.R. SUNDARAKRISHNAN, MADURAI
Dear Sir,
மேற்கண்ட முக்கியமான பிழையை சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி. இனிமேலும் பிழைகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்.
தங்கள் ஊழியன்,
சாரு