புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயம் பற்றி நாகூர் ரூமி

புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயத்தை நாகூர் ரூமிக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  அதற்கு அவர் எழுதிய கடிதம்:

அன்புள்ள அண்ணன்,

படித்துவிட்டேன். என்னளவில் இதில் மாற்றங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. 1970களுக்குக்  கொண்டுபோய் விட்டுவிடுகிறது உங்களது எழுத்து உண்மையிலேயே. இது அந்த அத்தியாயத்தின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சில இடங்களில் என் கருத்தை அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளேன். அவை சேர்ப்பதற்கு அல்ல. நீங்கள் பார்ப்பதற்கு. கட்டி ’படங்க்’ என்பது ’பதங்க்’ என்று இருக்கவேண்டும் (லதா பாடும் பாட்டைக் கேட்டால் உங்களுக்கே விளங்கும்).

ஆரம்பத்தில் அத்தியாயம் ஒரு கட்டுரை போலத் தொடங்குகிறது. ஆனால் போகப்போக சூடு பிடித்துக்கொள்கிறது. இந்தக் காலத்தில் உள்ள இணையம், போர்ன் பிலிம்ஸ் போன்றவற்றுக்கு ஒரு மாற்றாக இந்திப்படங்கள் இருந்தன என்ற கண்டுபிடிப்பு உண்மைதான் என்றே தோன்றுகிறது, யோசித்துப் பார்த்தால்.

நாகூர் அஞ்சுகறி சோறு பற்றிய அத்தியாயத்தையும் அனுப்பினால் படித்துச் சொல்வேன்.

அன்புடன்

ரஃபி