இந்தக் கார்ல் மாக்ஸ் யாருங்க? இவரோட பேக்ரவ்ண்ட் என்னா? அநியாயத்துக்கு எளுதுறாரே? ரொம்பப் பொறாமையா இருக்கே? நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எழுதி முடிச்சி போஸ்டிங்கும் போட்டுத் தொலைச்சிர்றாரே? இவ்ரு எந்த ஊரு? என்னா ஜாதி? கம்யூனிஸ்டா? ஆரெஸ்ஸெஸ்ஸா? இல்லே, நடுவுலயா? தீமூகாவா? ஆதீமூகாவா? இல்ல, வேறயா? ஒன்னுமே புரில. ஆனா நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள போஸ்டிங் போட்டுர்றாரு… இப்போ பாருங்க இன்னோரு அக்குறும்பு. அவுருதான்… கார்ல் மேக்ஸ்… அவரோட ஃபேஸ்புக் பேஜ்லேர்ந்து சுட்டது…
குறுப்பு 1:
அதிமுக ஆட்சி நெம்ப மோசம். இதே திமுக ஆட்சியில இருந்திருந்தா, சரியான நேரத்துல ஷட்டரத் தொறந்து தண்ணீரை வெளியேத்தியிருப்போம்.
சரிங்க, நீங்க எவ்வளவு பெரிசா ஷட்டரத் தொறந்திருந்தாலும், இதுவரைக்கும் நடந்திருக்கிற ஆக்கிரமிப்பைக் கணக்கிலேடுக்கும்போது வெள்ளம் வேகமா வடிஞ்சிருக்க வாய்ப்பில்லை, சேதாரம் வேணும்னா கொஞ்சம் குறைவா இருந்திருக்கும்னு நிபுணர்கள் சொல்றாங்களே அதுக்கு உங்க பதில் என்ன??
நடக்குறது அதிமுக ஆட்சி. எல்லா தப்புக்கும் அவங்கதான் காரணம். யூ டியூபுல போயி எதுவும் பாட்டு கூட கேட்டுடாத. அப்புறம் மனசு மாறிடும். இதே கோவத்தோட தேர்தல் வரைக்கும் கொந்தளிப்போட இரு. லைட்டா மழை வர்ற மாதிரி இருக்கு பாரு. கிளம்பு!!
குறுப்பு 2:
அதிமுக ஆட்சி நெம்ப மோசம் தான். என்ன பண்ணுறது திமுக ஆட்சி அதைவிட மோசமாச்சே. ஸ்பெக்ட்ரம் ஊழல், நில ஆக்கிரமிப்புன்னு போன அஞ்சு வருசத்துல அவங்க நடத்துன காட்டாட்சி மறந்து போய்டுமா?
சரிங்க, நீங்க சொல்ற ஊழலுக்கும், இந்த ஆட்சியோட தோல்விக்கும் என்னங்க சம்பந்தம்? திமுக ஆட்சிக்காலத் துல நடந்த மராமத்து பணிகளில் பாதி கூட இந்த ஆட்சியில நடக்கலைன்னு மக்கள் சொல்றாங்களே . அரசுத்தலைமைக்கும், அதிகாரிகளுக்கும் coordination இல்ல. பொதுப்பணித்துறை மந்திரிக்கு எந்த ஆறு எங்க போவுது அப்படிங்கற அடிப்படை அறிவு கூட இல்லன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன சொல்றீங்க??
அதெல்லாம் அதிகாரிங்க வேலைங்க. மந்திரி என்னங்க பண்ணுவாரு. எல்லா அதிகாரிகளுக்கும் ஒழுங்கா ட்ரைனிங் கொடுக்கணும். ஊழலை மொதல்ல ஒழிக்கணும். நாம நீர் வழித்தளங்களில் வீடு கட்டுறத நிப்பாட்டனும். சாக்கடைல குப்பைய போடக் கூடாது.
ஏங்க இந்த அரசாங்கம் செயல்படவே இல்லன்னு…
ஏங்க இப்படி ஏட்டிக்கு போட்டியாவே சிந்திக்கிறீங்க? நடுநிலையாவே சிந்திக்க வராதா உங்களுக்கு? கடைசியா சொல்றேன் கேட்டுக்கங்க. திமுக ஆட்சியில தப்பு நடந்தா அதுக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம். அதிமுக ஆட்சியில தப்பு நடந்தா, ஜெயலலிதா காரணம் அப்புறம் போன அஞ்சு வருஷம் ஆண்ட கருணாநிதிக்கும் அதுல பொறுப்பு உண்டு. கிளம்புங்க. கன்பீஸ் ஆவாதீங்க!!
குறுப்பு 3:
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது பொற்கால ஆட்சியில், போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நன்றி தெரிவித்தார்கள். இப்போதும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏங்க உங்க ஆட்சி செயல்படவே இல்லை, அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது, யார் சொல்வதை யார் கேட்பது, யாருக்கு யார் உத்தரவிடுவது என்ற குழப்பத்தில் நீங்கள் செயல்படாமல் இருந்தது தான் இவ்வளவு சேதத்துக்கும் காரணம் என்று விமர்சனம் வருகிறதே அதுக்கு என்ன சொல்றீங்க?
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது பொற்கால ஆட்சியில், போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களது உத்தரவுப் படி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நன்றி தெரிவித்தார்கள். இப்போதும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏங்க நான் என்ன கேக்குறேன்னா…
நீ என்ன கேட்டாலும் இதான் பதில். என்ன டயர்டாக்காத. ஓயாம ஒரே பதிலை சொல்ல எனக்கும் கடுப்பாதான் இருக்கு. நாங்க செயல்படவே இல்லன்னா, தண்ணி வடிஞ்சிருக்குமா இல்ல நீதான் வந்து வக்கனையா கேள்வி கேப்பியா?? இந்தா இந்த அம்மா ஸ்டிக்கர கைல வச்சிக்க. போற வழியில எவனாவது தன்னார்வலர் சொத்துப் பொட்டலம் தருவான். அதுல இந்த ஸ்டிக்கரை ஒட்டி வீட்டுக்கு எடுத்துட்டு போ. பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோசமா இரு. எவன் சொல்றதையும் நம்பாத. ரொம்ப போரடிச்சா பீப் சாங் கேளு. சரியா.. கிளம்பு!!