ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமாக இருக்கும் என்னுடைய சில புத்தகங்களில் ஒன்று, அறம் பொருள் இன்பம். ஆறு மாத காலம் அந்திமழையில் தொடர்ந்து நான் எழுதி வந்த கேள்வி பதில் தொகுப்பு. அந்த நூல் இப்போது விற்பனைக்கு வந்து விட்டது. அதன் அட்டை இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனக்கே அந்த அட்டையைப் பார்த்த போது ஏதோ இடிக்கிறதே என்று தோன்றியது. ஆனால் என்ன இடிக்கிறது என்று யோசிப்பதற்கெல்லாம் நேரமில்லை. இப்பொது அந்த அட்டைப்படத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்த பிரபு காளிதாஸ் அந்த அட்டையைக் கிழிக்கிறார். பிரபுவின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழிமொழிகிறேன். கீழே பிரபு காளிதாஸ்:
ஒரு புகைப்படக் கலைஞன் என்னதான் ஸ்கெட்ச் போட்டு ஃபோட்டோ ஷுட் செய்தாலும், அது டிசைனர் கையில் போகும்போது குரங்கு கையில் கிடைத்த மாலை மாதிரிதான். நாம் ஒரு ஐடியாவில் எடுத்திருப்போம். டிசனைர் அதை தன்போக்குக்கு செய்திருப்பார்.
இந்த முறை சாருவுக்கு நான் செய்த ஃபோட்டோ ஷுட் முறையான திட்டத்தோடு எடுக்கப்பட்ட ஒன்று. அதாவது, நான் கம்போஸ் செய்தது, நிறைய Negative Space விட்டுவைத்து, அதில் Text வருவதற்கான இடத்தையும் ஒதுக்கி, Essential Elements-ஐ Props ஆக கம்போஸ் செய்து எடுத்தேன்.
அதாவது, படத்தை ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. அப்படியே இறக்கி விடலாம். ஆனால், டிசைனர் செய்த வேலையைப் பாருங்கள். இது என்ன யாராவது அரசியல் தலைவர் புகைப்படமா…? அவரை மட்டும் நறுக்கி எடுத்து ஓட்ட. சாரு படத்தில் அவரை மட்டும் நறுக்கிவிட்டு, சுற்றிலும் கருப்பு நிறம் அடித்திருக்கிறார் டிசைனர். சட்டை மேல் விழும் வெளிச்சம் மட்டும் எங்கிருந்து அய்யா வரும். அதையும் சேர்த்து நறுக்கியிருக்க வேண்டியதுதானே…. அப்புறம் என்னத்துக்கு, மெனக்கெட்டு யோசித்து, மண்டை காய்ந்து, ஒரு லொக்கேஷன் தேர்ந்தெடுத்து, முறையான ஒளிக்காகக் காத்திருந்து ஷூட் செய்வது.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள். சாருவின் தலைக்கு மேல் உள்ள இடத்தில் தலைப்பும், வலதுபுறம் உள்ள பகுதியில் அவர் பெயரும் போட்டால் எப்படி இருக்கும். இப்படி மொண்ணை டிசைனர்களை வைத்துக்கொண்டு நாம் உலகத் தரத்தைப் பற்றி எங்கே பேசுவது. ஃபோட்டோ ஷாப்பில் என்னென்ன tools இருக்கிறதோ அத்தனையும் உபயோகப்படுத்தி முடிந்த அளவு சொதப்பியிருக்கிறார் டிசைனர்.
மாறாக போன வருடம் உயிர்மையில் அ. மார்க்ஸின் புத்தக அட்டைப் படம் பாருங்கள். அதுவும் மார்க்ஸ் வீட்டில் நான் எடுத்த படம்தான். முன் அட்டை முழுக்க அழகாகப் படத்தை இறக்கி அதில் எந்த வித கலர் கரெக்ஷன் செய்து சொதப்பாமல் அப்படியே இறக்கியிருப்பார் டிசைனர்.
சாருவின் படத்தில் நிஜப் படத்தில் அவர் ஜீன்ஸில் இருக்கும் நீலக் கலர் வலதுபுறம் அட்டைப் படத்தில் ரீகல் சொட்டு நீலம் தூக்கலாகப் போட்டதுபோல் இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று என் தலையெழுத்து. ரத்தக்கண்ணீர் வருது.
(பிகு: என் முடிஞ்சா நீ ஒரு டிசைன் பண்ணிப் பாருடா தாயோளின்னு எவனாச்சும் வந்தீங்க….? சங்குதான்).
பின்வருவது பிரபு காளிதாஸின் ஒரிஜினல். பக்கத்தில் இருப்பது தர்ம அடி வாங்கியிருக்கும் டிஸைனர் கைவண்ணம்.