நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் தொடக்க விழா பற்றிய கட்டுரை, இவையின்றி தொடர்களான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில் யுகேந்தர்), வருநின் ஹாலிவூட் படங்கள் பற்றிய கட்டுரை, இலங்கை தமிழ் சினிமாவின் கதை ஆகிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நண்பர்கள் அவசியம் கட்டுரைகளை வாசித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.