விசாரணை : a splatter film

நேற்று நடந்த விசாரணை விழாவில் பாரதி ராஜாவின் பேச்சு பிரமாதமாக இருந்தது.  இன்னமும் அவர் நகரத்து மனிதராக மாறவில்லை என்பதையே அப்பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன்.  தாயழி (தாயோளி அல்ல) என்ற வார்த்தையை அவர் மைக்கில் சொன்ன போது அது ஒரு கெட்ட வார்த்தையாகவே தெரியவில்லை.  அடுத்து லீனா மணிமேகலையின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது.  கழிவிரக்கம் என்று அவர் பேசிய பொருள் பற்றி நாம் மிகவும் யோசிக்க வேண்டும்.  கழிவிரக்கம்தான் இன்றைக்கு சினிமாவிலும் இலக்கியத்திலும் அதிகம் செல்லுபடியாகும் விஷயமாக இருக்கிறது.  தமிழக சினிமா ரசிகர்களையும் புத்திஜீவிகளையும் எழுத்தாளர்களையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியிருக்கும் விசாரணை எனக்குப் பிடிக்கவில்லை.  பார்வையாளர்களின் voyeuristic pleasure-ஐப் பூர்த்தி செய்யும் பணியை செவ்வனே செய்வதால்தான் அப்படம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.  நான் பார்த்த மிகச் சிறந்த படம் விசாரணை என்று அனுராக் காஷ்யப் சொல்லியிருக்கிறாரே, அவருக்கு சினிமா பற்றித் தெரியாதா என்று கேட்டார் எஸ்.ரா.  அனுராக் நல்ல இயக்குனர்.  ஆனால் அவருடைய சினிமா ரசனை மிகவும் வேடிக்கையானது.  அவருக்கு மிகப் பிடித்த இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார்.  மதுரை ட்ரையோ என்றே அவர்கள் மூவரையும் அவர் குறிப்பிடுவது வழக்கம்.  பாலா, அமீர், சசிகுமார் மூவரையும் கொண்டாடுபவர் விசாரணையையும் கொண்டாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  விசாரணை மோசமான சினிமா என்பதன் ஒரு உதாரணம், ஒரு மாடல்.  கோர்ட் என்ற மராத்தி படத்தைப் பார்த்தால் விசாரணை எப்படி மோசமான சினிமா என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  போர்னோ படம் பார்ப்பதால் ஏற்படும் இன்பமும் splatter film பார்ப்பதால் ஏற்படும் இன்பமும் ஒன்றுதான்.  செக்ஸ் பற்றிய மனத்தடை, சமூகத்தடை எல்லாம் உள்ளது.  வன்முறை பற்றி அப்படிப்பட்ட தடை இல்லை.  அதனால்தான் எல்லோரும் ஒருமனதாக விசாரணையைக் கொண்டாடுகிறார்கள்.  நேற்றைய விழாவில் என்னுடைய பேச்சு:

நன்றி:
www.shruti.tv