விழா பதிவுகள் – 2

முகநூலில் நிர்மல் எழுதியது:

“என்னங்க விழா முடிகிற வரைக்கும் கூட்டம் அப்படியே இருக்கிறது!! ஏதும் காசு கொடுத்து அழைச்சிட்டு வந்தாங்களா?” செவியில் விழுந்த ஒரு கமெண்ட். அந்தளவுக்கு விழாவை கொண்டாடினார்கள் அனைவரும். செம சந்தோஷம்.

சாருவின் எழுத்தின் அரசியல் என்ன? இது பொதுவாக எல்லோரும் முன் வைக்கும் கேள்வி. அனைத்து அடுக்கிலும் வெளிப்புறமாகவும் திரை மறைவாகவும் இருக்கும் அதிகாரத்தை எழுத்தில் தகர்த்தல். அதுவே அவரின் அரசியல். சாருவின் பேச்சு இதை மையப்படுத்தியே இன்று முழுவதும் பேசினார். அதிகாரத்தை எதிர்த்து அதிகாரம் செய்யாமல் எப்படி எதிர்க்க? அங்குதான் ஒரு எழுத்தாளன் தன்னை தானே தன் படைப்பில் அழித்துக்கொள்கிறான், தன்னையும் தன் வாழ்வையும் கருவாக்கி கொள்கிறான். 
Thank you for your love Charu .