ஸ்விட்ஸர்லாந்து போனாலும் விடாத சாதித் திமிர்…

சாதித் திமிரும், நிலப்பிரபுத்துவ பண்ணையார் மனோபாவமும் கொண்ட, இலக்கியம்-சினிமா-இசை- ஓவியம் போன்ற எந்தத் துறை குறித்தும் அறிவோ பிரக்ஞையோ இராத, பாமர ரசனை கொண்ட சிலரால்தாம் ஈழத் தமிழர்கள் இத்தனை பெரிய இன்னல்களை அடைந்தார்கள்.  இதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  ஈழத் தமிழரின் துயரம் பற்றி உலகில் எந்த ஒரு பதற்றமோ செய்தியோ எழாததற்கும் இப்படிப்பட்ட சாதித் திமிர் கொண்ட பண்ணையார்கள் தான் காரணம்.  வேடிக்கை என்னவென்றால் இது போன்ற ஆட்கள் நாகரீகமடைந்த மனிதர் போல் பேண்ட் சட்டை கோட் எல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள் ஸ்விட்ஸர்லாந்து போன்ற நாடுகளில்.

சிங்களர்களை விட ஈழத் தமிழர்கள் கலாச்சார ரீதியாக எவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் யாழ்ப் பல்கலைக்கழகம் போட்ட உத்தரவே சாட்சி.  மாணவர்கள் ஜீன்ஸ் டீ ஷர்ட் போடக் கூடாது என்பதே அந்த உத்தரவு.

http://thetimestamil.com/2016/02/27/%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/