படிக்க வேண்டிய பத்து நூல்கள்

http://bit.ly/1Txd52g

தி இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களெல்லாம் நம் முந்தின தலைமுறையின் புத்தகங்கள்.  அதற்காக நூறு ஆண்டுகள் முன்பு அல்ல.  நம் தந்தையரின் நூல்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இதே பட்டியலை சமகால எழுத்தாளர்களின் நூல்களை வைத்து எழுதினால் யார் யாரை எழுதலாம்; யார் யாரை சிபாரிசு செய்யலாம்.  இதில் ஒரு தர்மம் இருக்கிறது.  நாம் பரிசு கொடுக்கும் போது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பார்கள்.  பரிசின் நம்பகத்தன்மை போய் விடும்.  இதனால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் சோடை என்று அர்த்தமல்ல.  எனவே, சமகால எழுத்து என்று வந்தால் நான் போடும் பட்டியலில் நிச்சயமாக ஜி. கார்ல் மார்க்ஸ், சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ் மூவரும் பெயரும் இருக்காது.  ஏனென்றால் அவர்கள் மூவரும் என் குடும்ப உறுப்பினர்கள்.  அதனால் திறமையான ஆட்களை நான் வெளியே தான் தேடுவேன்.  சும்மா தோன்றியது, சொன்னேன்.  வேறொன்றுமில்லை…