அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 படம் பற்றிய என் மதிப்புரையை ஏஷியாநெட்டில் நீங்கள் படிக்கலாம். இந்த மதிப்புரையில் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம், இந்தப் படத்தின் லொகேஷன். இந்தப் படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் மிக முக்கியமான காரணி இதன் லொகேஷன். ஒரு படத்துக்கு லொகேஷனும் நடிகர்களுமே அதி அத்தியாவசியம் என்று அனுராக் சொல்லியிருப்பதாக பிரபு சொன்னார்.
நான் கோவா சிறையில் தருணைச் சந்திக்கப் போயிருந்த போது அங்கே எனக்குத் துணையாக இருந்தவர் டியா. தருணின் இளைய மகள். அவர் அப்போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராகவும் பிராணி நலம் பேணுபவராகவும் இருந்தார். சினிமாவில் சேரப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது பார்த்தால் ராமன் ராகவ் படத்தில் எல்லோரையும் கவர்ந்த ஆர்ட் டைரக்டர் அவர் தான் என்று இப்போதுதான் அறிந்தேன். இது சம்பந்தமாக கான் திரைப்பட விழாவுக்கும் சென்று வந்திருக்கிறார். வருங்காலத்தில் டியா புகழ்பெற்ற இயக்குனராக வருவார். தருணின் The Story of my Assassins நாவல் தான் தன்னுடைய ராமன் ராகவ் படத்தின் பணிக்குப் பெரிதும் உந்துசக்தியாக இருந்தது என்கிறார் டியா. படத்தைப் பார்த்த போது நானும் அஸாஸின்ஸ் பற்றி நினைத்தேன். இடப்பற்றாக்குறை காரணமாக விரிவாகப் பேச முடியவில்லை.
http://newsable.asianetnews.tv/south/raman-raghav-20-reveals-our-demonic-half