Blue Ocean Film Studies & Services Pvt. Ltd. சுருக்கமாக BOFTA அகாதமியில் வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து Film Appreciation Course துவக்கப்பட இருக்கிறது. பொதுவாக film appreciation பற்றி அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரிந்தால்தானே நல்ல படத்தை உருவாக்க முடியும்? 20 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ஒழிவு திவசத்தெ களி பற்றி நான் எழுதிய மதிப்புரையை இதுவரை சுமார் 39000 பேர் படித்திருக்கிறார்கள். மலையாளத்தில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றால், அவர்கள் திரைப்பட ரசனையை சிறு வயதிலிருந்தே வளர்க்கிறார்கள். இதுவரை நான் கேரளத்தில் நான்கு முறை film appreciation course எடுத்திருக்கிறேன். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை ஒரு வார காலம், திருவனந்தபுரத்தில் ஒருமுறை. ஒவ்வொரு வகுப்பும் நான்கு மணி நேரம் போயிற்று. காலை பத்து மணிக்குத் துவங்கினால் மதியம் இரண்டு மணிக்குக் கூட மாணவர்கள் இன்னும் இன்னும் என்பார்கள். எனக்குத்தான் பசி தாங்க முடியாமல் வகுப்பை முடிப்பேன்.
தமிழ்நாட்டில் முதல் முதலாக BOFTA-வில் செப்டம்பர் மாதம் முழுவதும் film appreciation வகுப்புகள் எடுக்க இருக்கிறேன். மதியம் இரண்டு மணியிலிருந்து வகுப்பு தொடங்கும். ஐந்து வரை போகும். வகுப்புகள் ஞாயிறு தவிர ஆறு தினங்களும் இருக்கும். ஒரு மாத கோர்ஸ். விபரங்களுக்கு BOFTA-வை அணுகுங்கள்.
www.bofta.in
PHONE: 044-2472-1234 FAX: 044-2472-5678
MOBILE: +91-90030-78000 /+91-90030-79000
+91-82200-78000 /+91-82201-78000
EMAIL: CONTACT@BOFTA.IN