பல ஆண்டுகளுக்குப் பிறகு கலா கௌமுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது. ஒழிவு திவசத்தெ களி படத்தைப் பற்றிய கட்டுரை. தொடர்ந்து கலா கௌமுதியில் எழுதுங்களேன் என்றார் டாக்டர் ஸ்ரீராம். இப்படி கட்டுரைகளிலேயே காலத்தைக் கழித்தால் புனைகதைகளே எழுத முடியாமல் போய் விடும் என்றேன். என்னதான் மொழிபெயர்ப்புக் கட்டுரை என்றாலும் அதற்கும் சில வேலைகள் செய்ய வேண்டுமே?
விகடன் தடம் இதழில் ஒழிவு திவசத்தெ களி பற்றிய என் நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. உயிர்மையில் கபாலி பற்றிய கட்டுரை. பொதுவாக இப்போதைய மனநிலையில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுத என் மனம் ஒப்புவதில்லை. தீயதைப் பார்க்காதே என்பதே என் நிலை. இருந்தாலும் சில கலாச்சார வக்கிரங்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
இன்னொரு ஆச்சரியமான, ஆனால் வழக்கமான விஷயம். ஒழிவு திவசத்தெ களி பற்றிய என் ஆங்கிலக் கட்டுரையை இதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் படித்திருக்கின்றனர். ஆனால் அதே இதழில் வந்த ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையை 176 பேர் படித்துள்ளனர். மலையாளிகளின் விழிப்புணர்வுக்கும் தமிழர்களின் நிலைக்கும் உள்ள வித்தியாசம் இது.
உயிர்மை இதழ் பற்றி மனுஷ்ய புத்திரனின் பதிவு கீழே:
வெளிவந்துவிட்டது உயிர்மை ஆகஸ்ட் இதழ். ஒவ்வொரு இதழுக்குப் பின்னே இருக்கும் உழைப்பும் பொருளாதார இழப்பும் கடுமையானது. விளம்பர ஆதரவும் சந்தாதாரர்களின் ஆதரவும் மட்டுமே இந்த முயற்சியை வலிமைப்படுத்தும். நீங்கள் உயிர்மைக்கு செலுத்தக்கூடிய சந்தா தொகை என்பது ஒரு அறிவுசார் இயக்கத்தை முன்னெடுக்கச் செய்யும் உங்கள் பங்களிப்பாக இருக்கும்.
Account Name: UYIRMMAI PATHIPPAGAM
Account No: 000105018931
Bank Name: ICICI
Bank Address: No.1 Cenotaph Road, Chennai-18
பணம் செலுத்திய விபரத்தை uyirmmai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவித்து உதவுங்கள்.. காசோலை/வரைவோலை(Cheque/DD)யாகவு
அனுப்ப வேண்டிய முகவரி :
11/29 Subramaniyan street
Abiramapuram
Chennai-600018.
Tamil nadu
India
Tele: 91-44-24993448
Mobile:+91 9003218208
e-mail: uyirmmai@gmail.com
உயிர்மை ஆகஸ்ட் இதழில்:
கபாலி பற்றி சாருவின் ருத்தரதாண்டவம், ஒரிய பழங்குடி மக்களின் பண்பாட்டை பேசும் ஒரிய எழுத்தாளர் ரிஷிகேஷ் பாண்டா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செறிவான கட்டுரை, டாக்டர் ஜாஹிர் நாயக்கை முன்வைத்து அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரை, பியூஷ் மனுஷ் பற்றிய தலையங்கம், சமூக ஊடக உறவுகள் மற்றும் ‘ ட்ரெண்டிங்’ பற்றிய விநாயக முருகனின் கட்டுரை, நீண்ட நாளைக்கு பிறகு ஷாஜி உயிர்மையில் எழுதியிருக்கும் புத்தக வாசிப்பை மையமாக வைத்து எழுதிய ஒரு ரொமாண்டிக் அனுபவம், வாசிப்பனுபவம் தொடபாக அபிலாஷ் எழுதியிருக்கும் கட்டுரை, துருக்கி ராணுவப்புரட்சி பற்றி எச்.பீர்முஹமதுவின் கட்டுரை, நாம் எதிர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதன் அரசியல் பற்றி பா.பிரபாகரன் கட்டுரை, இந்திரன் ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கும் தொடர், lone-wolf terrorism பற்றிய மாயாவின் கட்டுரை, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் கட்டுரை, சிறார் குற்றவாளிகள் தொடர்பாக சுகிதாவின் கட்டுரை, தமிழ்சினிமாவின் வீழ்ச்சி குறித்த அரக்கனின் கட்டுரை, ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த அர்ஷத் பத்தேரியின் மலையாள சிறுகதை, பொது சிவில் சட்டம் குறித்த நிவேதிதா மேனன் கட்டுரையின் மொழியாக்கம் மற்றும் மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைகள்