Huntsman

லக்ஷ்மி சரவணகுமார் தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கருத்து முரண்பாடுகள் அவருக்கும் எனக்கும் நிறைய உண்டு. அநேகமாக எல்லா விஷயங்களிலுமே என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உப்பு நாய்கள் நாவலும் எனக்குப் பிரீதியானது. ஒரே ஒரு ஆபத்துதான். வண்ணதாசன் அவரைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுவார். அப்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்தப் பக்கம் போய் விடாதே என்று லக்ஷ்மியிடம் எச்சரிப்பேன். அவருடைய புத்தக விமர்சன உரையிலும் இதைக் குறிப்பிட்டேன்.

இப்போது அவரது கானகன் நாவல் ஆங்கிலத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வெளிவந்துள்ளது. இதை ஆங்கில உலகில் பரவச் செய்ய வேண்டியது வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கடமை.

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் நாவலை (Huntsman), வாங்கி ஆங்கில உலகில் அறிமுகம் செய்யுங்கள்.. அது உங்கள் கடமை.