முடிதிருத்தும் கலைஞர் பெயர் ரமேஷ் என்றா சொன்னேன்? அடடா, தவறு. ரமேஷ் என்ற பெயரிலும் ஒரு கலைஞர் இருக்கிறார். நான் குறிப்பிட்டது மகேஷ். நேற்று எழுதியதை நான் திரும்பப் படிக்கவில்லை. ஆனால் கனவில் நான் எழுதியது ரமேஷ் என்று புலப்பட்டது. இப்படி பகலில் செய்யும் தவறுகள் இரவில் கனவில் சுட்டிக்காட்டப்படும். உங்களுக்கும் இப்படி நடக்குமா தெரியவில்லை. எனக்குப் பல முறை நடந்துள்ளது. ரமேஷ், மகேஷ் இருவருமே கலைஞர்கள். இருவருமே ஜெமினி அருகில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறார்கள். இருவருமே வி.ஐ.பி. இருவருமே அஜித், விஜய் ரேஞ்சில் முடிதிருத்துபவர்கள். ரமேஷ் கமல், ரஜினி ரேஞ்ச் என்று நினைக்கிறேன். ரமேஷை நான் சந்தித்ததில்லை. ராம்ஜியின் சிபாரிசின் பேரில் மகேஷை சந்தித்திருக்கிறேன். பிரமாதமான கலைஞர். முதல்நாள் எனக்கு முடிதிருத்தி விட்டு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, “நான் அஜித், விஜய் போன்ற எல்லா நடிகர்களுக்கும் முடிதிருத்தியிருக்கிறேன். ஆனால் யாரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. உங்களோடு மட்டுமே முதல் முதலாகப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றார். ஏன் என்று கேட்டபோதுதான் தெரிந்தது, அவர் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார், அவருக்குப் பிடித்த கவிஞர் தேவதேவன் போன்ற விஷயங்கள். நடிகர்களுக்கு இப்போது வெட்டுவதில்லை என்றும் சொன்னார். போனால் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கிறார்களாம். அடக் கடவுளே, நீ ஒரு கலைஞன். மகேஷ் ஒரு கலைஞர். ஒரு கலைஞனை இன்னொரு கலைஞனே மதிக்காவிட்டால் சமூகத்தில் வேறு எவன் மதிப்பான்? விடுங்கள். அந்த மகேஷை விட அவந்திகா நன்றாக வெட்டுகிறாள் என்பதுதான் நேற்று நான் சொல்ல வந்தது. இதைச் சொல்லாமல் வெறும் மகேஷ், ரமேஷ் என்றால் உங்களுக்கு என்ன புரியும்?
ஆனால் பா. ராகவன் போன் செய்து ”அதெல்லாம் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். மக்கு அய்யங்கார் பல பேரை எனக்குத் தெரியும். அவந்திகா வேண்டுமானால் வேற்றுக்கிரகத்து ஜீவியாக இருக்கும்” என்றார். நான் கொஞ்சம் அரைத் தூக்கத்தில் இருந்ததால் அதிகம் விவாதிக்கவில்லை. மணி அப்போது பத்து இருக்கும். இரவு. ராகவனுக்கு அப்போதுதான் இனிய மாலை. இப்போது என் பதில். எனக்கும் மக்கு அய்யங்கார் பலரையும் தெரியும். என் வீட்டிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருக்கிறார் ஒரு பிரபலம். அவரை வைத்தே ஒருவர் மிகச் சுலபமாக என் வாதத்தை முறியடித்து விடலாம். இந்தக் காலத்திலும் போய் கொடார்ட் என்கிறார். கடவுளே கடவுளே. ஹெட்ஃபோனை எப்படி மாட்டுவது என்று கூடத் தெரியவில்லை. அதுவாவது பரவாயில்லை. ஒருத்தர் கூடவா அதை அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை? அந்த அளவுக்கு உலக நாயகர் தனிமைப்பட்டுக் கிடக்கிறார். உடனே நீங்கள் ஸ்டாலினைக் கொண்டு வரக் கூடாது. எல்லா விஷயத்திலும் ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர். இல்லாவிட்டால் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் முதல்வர்களாக இருக்கும் போது இன்னமும் ஸ்டாலினுக்கு அந்தப் பதவி கானல் நீராகவே இருந்து வருகிறதே? அவர் முகக் கவசத்தைத் தவறாக அணிந்திருக்கிறார். ஒரு கவசத்தில் இரண்டு கயறுகள் உண்டு. ஒன்றை காதுக்கு மேலேயும் இன்னொன்றை காதுக்குக் கீழெயும் அணிய வேண்டும். அல்லது, கீழ்க் கயிற்றை மேல் காதிலும் மேல் கயிற்றைக் கீழ்க் காதிலும் அணியலாம். ஸ்டாலினோ இரண்டு கயிறுகளையும் மேல் காதிலேயே மாட்டிக் கொண்டிருக்கிறார். கடவுளே, எப்படி வலிக்கும் தெரியுமா? எல்லோருக்கும் இப்படித்தான் வலிக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கலாம். யார் கண்டது? என்ன பிரச்சினை என்றால், இந்தச் சிறிய பிழைகளைக் கூட இந்த இருவரிடமும் சுட்டிக் காட்ட ஒரு மனித ஆன்மா இல்லை என்பதுதான். பாவம், ரொம்பப் பாவம். எங்கே விட்டோம்?
ஆங். மக்கு அய்யங்கார். இப்படி மக்கு அய்யங்கார்களுக்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் – நான் சொல்ல வந்தது என்னவென்றால் – ஒரு நூறு புத்திசாலிகள் என்று எடுத்துக்கொண்டால், அதில் 80 பேர் அய்யங்கார்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமே. அய்யங்காரில் மக்கே இல்லை; எல்லா அய்யங்காரும் சுந்தர் பிச்சை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. சரி, தொண்ணூறில் மீதி இருபது? அதில் பத்து அய்யர். ஒன்பது மற்ற சாதிகள். அதிலும் சைவப் பிள்ளையின் விகிதாச்சாரம் அதிகம். ஒண்ணே ஒண்ணு அம்பேத்கர். அய்யர்களையும் சும்மா சொல்லக் கூடாது. உடனே வரிந்து கட்டிக் கொண்டு மக்கு அய்யர் இல்லையா, என் தெருவிலேயே காண்பிக்கவா என்று வராதீர்கள். கிடைக்கின்ற புத்திசாலிகளில் அய்யங்காரை எடுத்து விட்டால் மீதி அய்யர்கள்தான். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாகேஸ்வர ராவ் பூங்காவில் என்னோடு நடப்பவர்களில் ஆதி என்று ஒருவர். அய்யர் என்று சொல்லவே வேண்டாம். பார்த்தாலே நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கும். அது எப்படி? இந்திரா பார்த்தசாரதியைப் பார்த்திருக்கிறீகளா? அவர் ஒன்றும் பெரிய நம்பிக்கையாளர் கிடையாது. அக்னாஸ்டிக் என்று நினைக்கிறேன். மிக நவீனமான சிந்தனை கொண்டவர். ஆனால் நெற்றில் ஸ்ரீசூர்ணம் இருக்கும். அவரே போட்டுக் கொண்டது அல்ல. அவரின் மரபணு போட்ட ஸ்ரீசூர்ணம் நெற்றியில் துல்லியமாகத் தெரியும். ஸ்ரீசூர்ணம் இட்ட மாதிரி ஒரு நெற்றி. உலக மகா கம்யூனிஸ்டான இந்து ராமியின் நெற்றியிலும் அதே ஸ்ரீசூர்ணம் இருக்கும். பார்த்தாலே தெரிந்து விடும். வடகலையா தென்கலையா என்று கூட சொல்லி விடலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் மட்டும் “நானெல்லாம் உடையவர் கைங்கரியம்” என்பார். (புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளுங்கள். விண்டு சொன்னால் மண்டை உடைந்து விடும். வேண்டாம் எனக்கு வம்பு.) ஆனால் அவரைப் பார்த்தாலும் ஸ்ரீசூர்ணம் தெரியும். ஒருநாள் ராகவன் என்னைக் கேட்டார். கேட்டார் என்பதை விட அவர் குரலில் தெரிந்த பதற்றம்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “சார், என்னைப் பார்த்தால் பாப்பான்னு தெரியுதா? என்னது, பாப்பானா? நெத்தீல துலக்கமா ஸ்ரீசூர்ணம் தெரியறது. நீர் தென்கலைன்னும் சொல்லிடலாம்” என்றேன். “ஐயோ, நான் பண்டிகை காலத்தைத் தவிர மத்த சமயத்திலே ஸ்ரீசூர்ணம் இட்டுண்ட்றது இல்லியே?” என்றார். ”இப்போ தெரியறது நீர் இட்டது அல்ல; உம் முப்பாட்டன் உம் மரபணுவிலே இட்டது ஓய்” என்றேன். போடாமலே போட்டது போல இருக்கும். அது சரி, எதற்குக் கேட்டீர்கள் என்றேன். ”கரை வேட்டி போட்ட ஒரு அரசியல்வாதி எடுத்த எடுப்பில் ’டேய் பாப்பாரப் புண்ட மவனே’ன்னு திட்டிட்டான். ரொம்ப அப்செட் ஆய்ட்டேன்.” ”அவன் அப்படித் திட்டும் அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” அவர் என்ன செய்தார் என்பது பற்றி விலாவாரியாக எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். இந்தச் சம்பவத்தில் ராகவனின் ஒரே ஆச்சரியம், அவன் எப்படி அவர் ஜாதியைக் கண்டு பிடித்தான் என்பதுதான்.
இப்போது ஆதி கதைக்கு வருவோம். அவருடைய பேத்திகள் அமெரிக்காவில் பிறந்து வளர்கிறார்கள். மைலாப்பூர் – நியூஜெர்ஸி கலாச்சாரப்படி பரத நாட்டியம், கர்னாடக சங்கீதம் எல்லாம் உண்டு. இதிலெல்லாம் ஒன்றும் விசேஷம் இல்லை. மேற்கத்திய சங்கீதத்தைக் கற்றுக் கொண்டு அமெரிக்கப் பத்திரிகைகளில் Prodigies என்று சொல்லப்படும் விதத்தில் சாதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் மேற்கத்திய இசையில், இளையவள் ஓவியத்தில். ஓவியம் என்றால் ஒரு உருவத்தைப் பார்த்து அப்படியே வரைவது அல்ல. அப்ஸ்ட்ராக்ட் பெய்ண்டிங். இரண்டையுமே பார்த்தேன். உலகத் தரத்துக்கும் மேலே. இப்படிப்பட்ட prodigiesஐ அந்த மரபணு உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. வசதி வாய்ப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு. பேச்சு முடிந்ததும் நிர்வாக இயக்குனருக்கு சில மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டியிருந்தது. அவரது மின்னஞ்சல் முகவரி கேட்டேன். அப்படியென்றால் என்ன என்று கேட்கிறார். வெளியே வந்து மிகுந்த சோர்வுடன் என் தோழியை அழைத்து, “என்னம்மா இது, நம் சமூகம் முன்னேற இன்னும் 2000 வருஷம் ஆகும் போல் இருக்கிறதே?” என்றேன். இங்கே மைலாப்பூரிலும் சில prodigies ஐப் பார்க்கிறேன். ராகவனின் பேத்தி சஹானா ஒரு ப்ராடிஜி. அவள் பேசும் பேச்சுக்களைத் தொகுத்தால் இன்னொரு ஆழி கதைகள் கொண்டு வரலாம். ஆ, சொல்ல மறந்து போனேன். சீனியின் பையன் ஆழிமழைக் கண்ணன். ஆழி கதைகளை நீங்கள் படித்தால் அது என்னவோ சீனியே இட்டுக் கட்டி எழுதியது போல் இருக்கும். பழகியவர்களுக்குத்தான் தெரியும், அவனைப் பற்றி சீனி எழுதியது கம்மி என்று. ஒருநாள் சென்னை புத்தக விழாவில் காயத்ரியின் காதுகளில் ரகசியமாக ஏதோ சொன்னான் ஆழி. சீனி மற்றும் அனைவரும் இருந்தோம். அவன் சொன்னதைக் கேட்ட அடுத்த கணம் காயத்ரியின் முகத்தில் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. சொல்லி விட்டு “யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லி சத்தியமும் வாங்கிக் கொண்டான். அவன் போன பிறகு என்ன என்றேன். “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இந்த ட்ரெஸ் உங்களுக்காகவே தச்சது போல இருக்கு” என்று சொல்லியிருக்கிறான். அப்போது அவன் வயது ஆறு இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை காயத்ரியைக் கையில் பிடிக்க முடியவில்லை. அது வேறு விஷயம்.
சரி, நம் குழந்தைகளும் எப்படி இருக்கின்றன என்று ஒருநாள் சோதித்துப் பார்த்தேன். சொந்தக்காரரின் நாலு வயதுக் குழந்தையிடம் உன் பேர் என்னடா செல்லம் என்றேன். வெளீல போடா ஒக்கால ஓளி என்றான். நான் வெளியேறும் வரை அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். சொந்தக்காரருக்கும் என்னவோ போல் ஆகி விட்டது. ’ஏற்கனவே பாதி சொந்தம் புழலில் இருக்கிறது. இதுவும் இப்போதே தயாராகிறது’ என்று நினைத்துக் கொண்டு நடையைக் கட்டினேன். இதனால் எல்லாம் ஹிட்லர் மாதிரி இனவாதத்தை நம்புகிறேன் என்று சொல்லி விட மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். தெய்வத்தால் ஆகாது என்றாலும் முயற்சியால் முதலிடத்தைப் பிடிப்போம் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். இருந்தாலும் பொதுவாக இந்த மரபணுவின் லீலா விநோதங்களைக் குறித்த என் மூட நம்பிக்கைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
பா. ராகவன் இன்னும் சொன்னார். தானும் எவ்வளவு மக்கு அய்யங்கார் என்பதை நிறுவினார். அதை நான் ஆண்டாள் பாடின “வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக” என்ற அர்த்தத்தில் மட்டுமே எடுத்துக் கொண்டேன்.
சீனி ஒரு பெரிய உதாரணம். அவர் மட்டும் ஜெயலலிதாவிடம் சசிகலாவின் இடத்தில் இருந்திருந்தால் ஜெ. நிச்சயம் பிரதம மந்திரியாக இருந்திருப்பார். அப்படி ஒரு மூளை.
நேற்றைய அய்யங்கார் கட்டுரை ரொம்பப் பேருக்குப் பிடித்து விட்டது போல. ஒருமுறை சீனி சொன்னார். “நீங்கள்தான் இப்படிச் சொல்கிறீர்கள். இந்த அய்யங்கார்களையெல்லாம் பிடித்து ஒரு தீவில் போட்டு விட்டு நூறு நாட்கள் கழித்துப் போய்ப் பார்த்தால் ஒரு ஆள் கூட இருக்க மாட்டான். எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக் காலி பண்ணியிருப்பான்.” அது பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார்.
***
ஒருமுறை விமலாதித்த மாமல்லன் சொன்னார், ”நீ ஏன் தான் பணத்துக்குக் கஷ்டப்படுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை. நீ எழுதிக் குவித்துள்ளதையெல்லாம் கிண்டிலில் போட்டால் தாராளமாக மாதாமாதம் ஒரு தொகை உன் கணக்கில் வந்து சேரும். நீ என்னவோ கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிறாய்.” இந்தப் பேச்சு சென்ற வாரம் என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயத்தைக் கேட்டபோது ஞாபகம் வந்தது. அவரும் ஒரு எழுபது எண்பது புத்தகங்கள் எழுதியிருப்பார். அவருக்குக் கிண்டிலில் மாதம் 30000 ரூ. வருவதாகச் சொன்னார். எனக்கு இதில் இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று, இதில் நான் ஈடுபட்டால் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என் புத்தகங்களின் விற்பனை குறையுமா அல்லது அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா என்பது தெரிய வேண்டும். கிண்டில் விற்பனை புத்தக விற்பனையை பாதிக்காது என்று நிச்சயமாகத் தெரிந்தால் மட்டுமே கிண்டிலில் ஈடுபடலாம். இன்னொன்று, கிண்டிலில் போட்டால் உடனடியாக இலவச பிடிஎஃப் பிரதிகள் இணையத்தில் வந்து விடுகின்றன. எனவே ஒரு ஆண்டு பொறுக்கலாம் என்று பார்க்கிறேன். வருடாந்திர ராயல்டி ஆறு லட்சம் ரூபாய் வந்தாக வேண்டும். மாதம் 50000 ரூ. அது அடுத்த ஆண்டும் முடியாவிட்டால் (முடியும் என்றே நம்புகிறேன். பார்ப்போம்) கிண்டிலில் பரிசோதிக்கலாம்.
எனவே சாருஆன்லைன் இணைய தளத்துக்கு சந்தா அல்லது நன்கொடை அனுப்புவதாக இருந்தால் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம். என்னுடைய பல நெருங்கிய நண்பர்கள் இது பற்றி எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்கள். அது எனக்குப் புரியவில்லை. கிண்டில் பக்கம் போய் விடலாமா என்று நினைக்க அது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் எழுதுவதற்குக் கிடைப்பதே நாலைந்து மணி நேரமாக இருக்கும்போது அதையும் கிண்டிலுக்கு செலவு செய்வதா என்ற கிலேசம் வேறு. எந்தப் பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் நமக்காக வேறொருவர் அந்த வேலையைச் செய்தாலும் நம் நேரமும் அதில் கொஞ்சம் செலவாகத்தான் செய்கிறது.
என் நண்பர் ராமசுப்ரமணியன் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். நிலவு தேயாத தேசம் நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அவர் காயத்ரியிடம் ”உனக்கு ஐந்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டிருக்கிறார். உடனே அவள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் “முதலில் நீங்கள் சொல்லுங்கள்” என்று பந்தை தன் கணவர் பக்கம் திருப்பியிருக்கிறாள். உடனே சற்றும் யோசிக்காமல் சடசடவென்று ராம், “ஐம்பது லட்சத்தை ஸ்ரீகாந்துக்குக் கொடுப்பேன். (ஸ்ரீகாந்த் ராமின் நண்பர்) அவனுக்குத்தான் பணத்தேவை அதிகமாக இருக்கிறது. ஐம்பது லட்சம் சாருவுக்கு. ஐம்பது ஷங்கருக்கு (நண்பர்). ஐம்பது தம்பிக்கு. உனக்கும் ராம்ஜிக்கும் பிஸினஸுக்காக (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) ஒரு கோடி. எவ்வளவு ஆச்சு? மூணு கோடி. ஒரு கோடியில் ஒரு முதியோர் இல்லம். இன்னொரு கோடியை வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியில் முதியோர் இல்லத்துக்கான செலவுகள். சரி, நீ இப்போ சொல்.”
காயத்ரி “போட் கிளப்பில் ரெண்டு கோடிக்கு ஒரு அபார்ட்மெண்ட். சாருவுக்கு மாதாமாதம் வட்டி வருகிறாற்போல் அம்பது லட்சம் ஃபிக்ஸட் டெபாஸிட்டில்…” மீதிக்கு ஏதோ சொன்னாள். மறந்து விட்டேன். ராமை அடிக்கடி மகாத்மா என்று சொல்வேன். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai