ஒரே ஒரு அதிசயம்

ஜூன் இறுதியில் கோவா செல்கிறேன்
கூட்டமில்லை கொண்டாட்டமில்லை
மழைகூட இல்லாத பருவம்
மதுபான விடுதிகள் வெறிச்சோடி நிற்கும்
இப்படி
கோவாவே தனிமையில் மூழ்கி இருக்க
கடல் மட்டும் நீலம் மாறாமல்
அலைகளின் மொழியில் அதிசயம் பேசும்