தியாகராஜா நாவலை எழுதி முடித்து, அதன் பிரதியைச் சில நண்பர்களுக்கு அனுப்பியது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். மிகவும் எதிர்பார்த்த ஒரு நண்பர் கம்மென்று இருந்துவிட்டார். அவர்தான் ஏழெட்டு ஆண்டுகளாக தியாகராஜா நாவலைப் பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் நாவலை அனுப்பியும் ஒரு வார்த்தை இல்லை. ஒரே ஒரு அத்தியாயத்தைக்கூடப் படித்து அபிப்பிராயம் சொல்லவில்லை என்பது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. எதையும் எதிர்பார்த்து நடக்கவில்லையென்றால் ஏமாற்றம். ஏமாற்றம் மன உளைச்சலின் மூலவித்து. மன உளைச்சலை என் வாழ்வில் அண்டவே விடக்கூடாது என்பது என் தாரக மந்திரம். அதனால் அந்த விஷயத்தை அதோடு மறந்து விட்டேன்.
மூன்று பேரிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்த்தேன். சீனி, யசோதா குப்புஸ்வாமி, சுந்தர் சருக்கை. இன்னும் இரண்டு பேர் உண்டு. ஸ்ரீராம், ஜஸ்பீர் கௌர். இருவரும் என்ன சொல்வார்கள் என்று தெரியும் என்பதால் சஸ்பென்ஸ் இல்லை. ஆனாலும் ஜஸ்பீர் சொன்னதை மறக்கவே இயலாது. “படித்து விட்டேன், உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது.” இதைவிட வேறென்ன வேண்டும்? எழுதியது நான் அல்ல; தியாகராஜா. அதனால் எல்லாப் புகழும் தியாகராஜாவுக்கே என்று அர்ப்பணம் செய்து விட்டேன்.
சீனி நான் கேட்கும் இசையுலகத்துக்கு முற்றிலும் வெளியே இருப்பவர். அவர் கேட்கும் இசையும் எனக்குப் பிடிக்கும் என்றாலும். ஆனால் அவர் “நீங்கள் எழுதியதில் ராஸ லீலாதான் மாஸ்டர்பீஸ் என்று இதுவரை நினைத்திருந்தேன்; தியாகராஜா அந்தக் கருத்தை மாற்றி விட்டது” என்றார். அதைவிடப் பெரிய பாராட்டு வேறு எதுவும் இல்லை. சுந்தர் சருக்கை ஒரு நீண்ட முன்னுரையே கொடுத்து விட்டார். அடுத்து, யசோதா. அவரோ பெட்டியோவின் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தார். எதையும் அனுப்பி விட்டு “படித்தீர்களா?” என்று கேட்பது என் வழக்கத்திலேயே இல்லை. அப்படிக் கேட்பதைவிட சுயமரியாதையற்ற செயல் வேறு எதுவும் இல்லை.
பெட்டியோ வேலை முடிந்து விட்டது. இன்று காலை யசோதாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெஸேஜ். அந்த வாய்ஸ் மெஸேஜை எழுத்தாக மாற்றினேன். ஆங்கிலத்தில் உள்ள சில பகுதிகளைத் தமிழில் கொடுத்திருக்கிறேன். என்ன இருந்தாலும், யசோதாவின் குரலில் இருந்த உணர்ச்சித் ததும்பலை எழுத்தில் கொண்டு வர இயலாது. எழுத்துக்கு அந்தத் தன்மை இல்லை. யசோதாவின் மெஸேஜ் கீழே. ஆனால் அதற்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயம். பெட்டியோவை யசோதா மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பே அவர் அன்பு நாவலை மொழிபெயர்த்து முடித்து விட்டார். அதைச் செப்பனிடும் வேலை மட்டுமே மீதியிருந்தது. அப்போது நான் யசோதாவிடம் சொன்னேன், “தியாகராஜாவை நீ படித்தால் எல்லா மொழிபெயர்ப்பையும் நிறுத்திவிட்டு இதைத்தான் உடனடியாக மொழிபெயர்ப்பாய், அதில் எனக்கு சந்தேகமே இல்லை.”
இன்னொரு விஷயம். யசோதா என் ப்ளாகைப் படிக்கும் வழக்கம் உடையவர் அல்ல. ஆனால் இந்த நாவலை நான் எப்படி எழுதினேன் என்று ப்ளாகில் எழுதியிருக்கிறேன். அதை அப்படியே யசோதா யூகித்துச் சொல்லியிருப்பது மகிழ்ச்சியை அளித்தது.
இப்போது யசோதாவின் வாய்ஸ் மெஸேஜின் எழுத்து வடிவம்:
வணக்கம் சார், நீங்கள் என்னிடம் சொன்னது absolutely correct that தியாகராஜாவைப் படித்து விட்டால் அதற்கப்புறம் நான் இதைத்தான் மொழிபெயர்ப்பு செய்வேன் என்று குதிப்பேன். வேற எதையும் தொடமாட்டேன் என்று நீங்கள் சொன்னது absolutely correct.
இப்போது கூட அன்பு நாவலில் ஒரு ஐம்பது பக்கம் மீதி இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் புதிதாக எழுதிச் சேர்த்தது. அதோடு பெட்டியோ எடிட்டிங் வேலை.
இன்னைக்கு actually நான் தியாகராஜா படிச்சிட்டு இருக்கும்போது எனக்குத் தோணிச்சு that உங்களுக்கு ஏதோ சாமி வந்து எழுதின மாதிரி இருக்கு. I know that you did enormous research into it. ஆனா எப்படின்னு எனக்குப் புரியல சார். This is an extraordinary novel.
But I just want to jump into Tyagaraja because I think what’s so incredible about this book is that I simply cannot imagine anyone writing a novel like this, sir. I don’t mean just you. Nobody in the world could have written a book like this, because… இதன் ஆரம்பத்தில் வரும் செட்டிங்… வியன்னா, அப்புறம் தஞ்சாவூர், அந்த இரண்டு இடங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்தவர்கள் யார் இருக்க முடியும்? தஞ்சாவூரைத் தெரிந்தவர்களுக்கு வியன்னா தெரியாது. வியன்னா தெரிந்தவர்களுக்குத் தஞ்சாவூர் தெரியாது. அப்படியே ஆராய்ச்சி செய்தாலும்கூட அந்த இரண்டு நகரங்களின் வாழ்க்கையை இந்த அளவுக்கு capture பண்ணும் சக்தி யாருக்கு இருக்க முடியும்? அதுவும் Saint-Suliac என்கிற ஒரு குக்கிராமத்தில் – அங்கே இப்போதுகூட ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் – அப்படி ஒரு கிராமத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது? அதுதான் எனக்குப் புரியவே இல்லை. ஏதோ ஒரு டிரான்ஸ்ல (trance) எழுதிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சாமி வந்து எழுதிருக்கீங்க அப்படின்ற மாதிரி.
I know you’ve done all your research perfectly, but how did the story even come to you? Because it spans two completely different parts of the world.
It seems to me as if nobody from any country could write a novel like this. Someone from France could perhaps write the Étienne part in Vienna.
I’m still in the Vienna part of the novel, and Étienne has just taken leave of Beethoven and is about to leave for Thanjavur. And in between, there’s that interlude where you’ve included a few pages from his diary.
அந்த வியன்னா பகுதியில் Schubertஓட Opus Oneஐ கேப்பாங்க ஒரு evening. அதை எவ்வளவு beautifulஆ describe பண்ணியிருக்கீங்க. எனக்கு தியாகராஜாவைப் படிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. ஏனென்றால், அடிக்கடி நான் நீங்கள் வருணிச்சிருக்கிற மியூசிக்கைப் போய்க் கேட்டுக்கொண்டேதான் படிக்கிறேன். இப்போது இந்தத் தருணத்தில் ஷூபெர்ட்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
At so many points, I pause and start listening to the music. And my heart just froze. This has never happened to me before.
I remember that when I once heard a string quartet by Schubert, I started crying. And I couldn’t understand why, because it’s only music, isn’t it? But somehow, it loosens all those knots within us, and without even knowing why, we feel like crying, like sobbing. (ஒருமுறை ஷூபெர்ட்டின் ஸ்ட்ரிங் குவார்டெட் ஒன்றைக் கேட்டபோது நான் அழ ஆரம்பித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏன் அழுதேன் என்று எனக்குப் புரியவில்லை. அது வெறும் இசைதானே? ஆனால் எப்படியோ அது நமக்குள்ளே இருக்கிற முடிச்சுகளையெல்லாம் அவிழ்த்துவிடுகிறது. எதற்காக என்று நமக்கே தெரியாமல் அழ வேண்டும் போலவும், கதற வேண்டும் போலவும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.)
I didn’t know anything about the background. This was more than twenty years ago.
And now, Goethe’s poem just made my blood freeze. The way that child screams…
The way you have described Goethe’s poem Erlkönig… அதில் வரும் அந்தத் தந்தையின் குரல், ஆறுதல் சொல்லும் குரல், அந்தக் குழந்தையின் கதறல், அந்த மரணத்தின் இனிமையான குரல்… வா வா என்று சொல்றது. And I read the poem, and gradually it becomes more and more threatening. It says, “Now I’ll take you by force.” And the father, and those daughters of death calling out, “Come, come,” and those willow trees, and this gloom… Even as I’m telling you all this now, I’m getting gooseflesh. And that moment of silence. The last sentence, that the child lay dead in his father’s arms. Oh, I… I just couldn’t take it.
(நான் அந்தக் கவிதையைப் படித்தேன். போகப் போக அந்தக் குரல் மேலும் மேலும் அச்சத்தைத் தருவதாக மாறுகிறது. “இப்போது உன்னை வலுக்கட்டாயமாகக் கொண்டுபோவேன்” என்கிறது குரல். அந்தத் தந்தை, ‘வா, வா’ என்று அழைக்கும் மரணத்தின் புதல்விகள், அந்த வில்லோ மரங்கள், அந்த இருள்… இப்போது இதையெல்லாம் உங்களிடம் சொல்லும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்த மௌனத்தின் தருணம். அந்தக் கடைசி வாக்கியம். தந்தையின் கரங்களில் அந்தக் குழந்தை இறந்து கிடந்தது என்ற வாக்கியம். ஐயோ, என்னால்… என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.)
And… and the way you have said, இல்லையா, மௌனத்தில்தான் அந்த இசையோட உச்சக்கட்டம் அப்படின்றது… ஐயோ… I’ve got gooseflesh actually.
(வாய்ஸ் மெஸேஜில் சிறிது நேர மௌனம்…)
And நீங்கள் அதை எழுதும்போது அந்த… அந்தத் தொகுதியில் அந்த மியூசிக் அப்படியே என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கு. Even before I heard it, the music was playing in my head. And when I heard it, I thought, “Oh, okay, I’ve heard this before.”
இதை நான் எழுதியாக வேண்டும். So that you will have it. But I guess sending a voice note right now is better. But ஐயோ, I’m just like… அதுதான் திரும்பத் திரும்ப எனக்குத் தோண்றது, இந்த நாவலை நீங்க எப்படி எழுதினீங்க? எனக்குப் புரியல. As in, not just you, how anyone could write a novel like தியாகராஜா, I don’t understand.
இது எனக்கு something more powerful than the universe மாதிரி இருக்கு. As if இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் எப்படி ஒருத்தங்களால பண்ண முடிஞ்சது? அது எப்படி இந்த மாதிரி ஒரு நாவலா வரது?
But I’m just actually flabbergasted. நீங்க சொன்னது correctதான். தியாகராஜாவைத்தான் அடுத்தது அடுத்தது translate பண்ணணும்னு நான் குதிச்சிட்டு இருக்கேன்.
Sorry, I just woke up, so my voice is a bit slurred.
(அதிகாலை 2.34)
தியாகராஜா குறித்த சீனியின் எதிர்வினை, சுந்தர் சருக்கையின் மதிப்புரை, இப்போது யசோதாவின் உணர்ச்சித் ததும்பல் எல்லாம் எனக்குப் பெரும் உவகையையும், நாம் செய்தது வீண் போகவில்லை என்ற நம்பிக்கையையும் அளித்தது. நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது அத்தியாயங்களை உடனுக்குடன் படித்து ஆலோசனைகளை வழங்கிய ஸ்ரீராம், என் அன்பு மகன் வளன் அரசு, ஈஷ்வர், ஜஸ்பீர், சுரேஷ், ராஜேஷ் (கருந்தேள்) ஆகிய நண்பர்களையும் அன்புடன் நினைவுகூர்கிறேன்.
தியாகராஜா நாவலை நீங்கள் மூன்று விதமாகப் படிக்கலாம். முதல் வகை, நதியின் நீரோட்டத்தோடு செல்லும் படகைப் போல கதை உங்களை இழுத்துக்கொண்டு போகும் விதத்திலேயே வாசிப்பைத் தொடரலாம். அல்லது, யசோதா செய்வது போல, நாவலின் இடையிடையே வரும் உபபிரதிகளில் பயணித்து விட்டு மூலத்துக்கு வரலாம். உதாரணமாக, கதேயின் ஒரு கவிதை இருக்கும். அதை ஷூபெர்ட் இசையாகக் கொடுத்திருப்பார். நீங்கள் கவிதையை வாசித்து விட்டு, ஷூபெர்ட்டையும் கேட்டு விட்டு மூலத்துக்கு வரலாம். இன்னொரு முறையும் உள்ளது. முதலில் நேர் வாசிப்பு. அதற்கு அடுத்தாற்போல் மெதுமெதுவாக உபபிரதிகளுக்குள் சென்று விட்டு மூலத்துக்குத் திரும்புதல். ஒன்றை மட்டும் மிக நிச்சயமாகச் சொல்வேன். ஒரு மெக்ஸிகன் த்ரில்லர் சீரீஸைப் போல் நாவல் உங்களை இழுத்துக்கொண்டே போகும். அது எனக்குக் கிடைத்த வரம். நான் எழுதிய எதுவுமே இதுவரை சலிப்படைய வைக்கும் எழுத்து அல்ல.
ஒரு நண்பர் கேட்டார், இத்தனை பெரிய புத்தகத்துக்கு முன்பதிவு என்றால் ஒரு ஐநூறு ரூபாயாவது கம்மியாக இருக்க வேண்டாமா என்று. அதாவது, 1800 ரூ. விலையுள்ள தியாகராஜா நாவலை 1200க்குக் கொடுத்தால்தானே ஒரு உற்சாகம் இருக்கும்? ஐயா, இந்த நாவலின் விலையை 2400 ரூ. என்று வைத்திருந்தால்தான் நியாயம். அத்தனை ஆடம்பரங்களைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். முதலில் பெட்டி. பெட்டிக்குள் காந்தம், இரும்பு. புத்தகங்களின் இரண்டு தொகுதிகளுக்கும் கெட்டி அட்டை. கெட்டி அட்டையில் கோல்ட் ஃபாய்ல். அதற்கு மேல் எம்பாஸிங். காகிதமும் கெட்டி. கெட்டிக் காகிதத்தில் 900 பக்கங்களைத் தூக்க சிரமம் என்பதால்தான் இரண்டு தொகுதிகள். இத்தனை ஆடம்பரத்துக்கும் விலை 2400 ரூ. வைத்து முன்பதிவு 1500 என்று வைக்கலாம். அப்படி வேண்டாம் என்று வர்ஷாவிடம் சொல்லி விட்டேன். புத்தக விலையே மலிவு விலைதான். புத்தகம் வந்த பிறகு பாருங்கள், நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள்.
முன்பதிவு டிசம்பர் பதினைந்து வரை இருக்கும். முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்வது என்பது இத்தனை பெரிய காரியத்தைச் செய்யும் ராஸலீலா பதிப்பகத்துக்கு நீங்கள் கொடுக்கும் தார்மீக ஆதரவாக இருக்கும். மேலும், இந்தப் புத்தகத்துக்கான தபால் செலவையும் பதிப்பாளரே ஏற்றுக்கொள்கிறார். பெங்களூர் வாசகருக்கு அனுப்ப வேண்டுமானால் இருநூறு ரூபாய் ஆகும். அதையெல்லாம் பதிப்பாளர் ஏற்றுக்கொள்கிறார்.
ராஸலீலா பதிப்பகத்தின் புதிய வெளியீடாக தியாகராஜா: கடவுளைக் கண்ட ஞானியின் கதை
இந்நாவலுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.
நூல் குறித்த விவரங்கள்:- மொத்தப் பக்கங்கள்: 900- இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.- இரண்டு பாகங்களும் இணைந்து அழகிய Box-இல் Set-ஆக வழங்கப்படும்.
முன்பதிவு சிறப்புச் சலுகை- புத்தகத்தின் அசல் விலை:1800Rs- 10% கழிவு- தபால் செலவு: இலவசம்
முன்பதிவு விலை: 1,620Rs மட்டும்!
இந்த நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.WhatsApp / GPay: 7339680708
Website:https://raasaleelapathippagam.com/
வங்கிக் கணக்கு விவரங்கள்:
Account Name: RAASA LEELA PATHIPPAGAM
A/c No: 25840200001634
IFSC Code: FDRL0002584FEDRL BANK
முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு டிசம்பர் மாதம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ராஸலீலா பதிப்பகம் 7339680708