விடுபட்ட பெயர்கள்

ஸ்பெஷல் எடிஷனுக்காகப் பெயர் கொடுத்த நண்பர்கள் சிலரது விவரங்கள் தேவை. மோகன்குமார் மற்றும் பாண்டியராஜன். ஏற்கனவே விவரம் அனுப்பியவர்கள் திரும்பவும் அனுப்ப வேண்டாம். அனுப்பாதவர்கள் விரைவில் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். charu.nivedita.india@gmail.com

பரவசம்

தியாகராஜா நாவல் ஒருவழியாக அச்சுக்குப் போய் விட்டது.  நாலைந்து முறை பிழைதிருத்தம் செய்தேன்.  ஒரு கட்டத்தில் – அதாவது, நேற்று மாலை – அதை நிறுத்தி விட்டேன்.  ஏனென்றால், பிழைதிருத்தம் என்ற காரியம் செப்பனிடுதலாக மாறிக்கொண்டு வந்தது.  ஒரு இடத்தில் ”இருந்தது” என்று இருந்தது.  அதை ”நின்றது” என்று மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.  மாற்றினேன்.  இப்படியே அலங்கரித்துக்கொண்டிருந்தால் அதற்கு முடிவு ஏது?  ந. முத்துசாமியின் நினைவு வந்தது.  அவர் நீர்மை சிறுகதையை எழுபது முறை திருத்தி … Read more