தியாகராஜா நாவல் ஒருவழியாக அச்சுக்குப் போய் விட்டது. நாலைந்து முறை பிழைதிருத்தம் செய்தேன். ஒரு கட்டத்தில் – அதாவது, நேற்று மாலை – அதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால், பிழைதிருத்தம் என்ற காரியம் செப்பனிடுதலாக மாறிக்கொண்டு வந்தது. ஒரு இடத்தில் ”இருந்தது” என்று இருந்தது. அதை ”நின்றது” என்று மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். மாற்றினேன். இப்படியே அலங்கரித்துக்கொண்டிருந்தால் அதற்கு முடிவு ஏது? ந. முத்துசாமியின் நினைவு வந்தது. அவர் நீர்மை சிறுகதையை எழுபது முறை திருத்தி எழுதினாராம். அப்போதெல்லாம் எழுபது முறையும் காகிதத்தில் திரும்ப எழுத வேண்டும்.

கடைசி அத்தியாயம் அம்ருதம். அதை மட்டும் என்னால் பிழைதிருத்தம் செய்ய இயலவில்லை. காரணம் சொல்கிறேன். சில அன்பர்கள் தங்களுக்குப் பிடித்தமான (சினிமா) இசை அமைப்பாளரையோ பாடகரையோ சந்தித்தால் அழுதுவிடுவதாகச் சொல்வதைப் படித்திருக்கிறேன். அது துக்கம் அல்ல. பரவசம். பலருக்கும் தங்கள் சினிமா ஹீரோவைப் படுதாவில் பார்த்தாலே பரவச உணர்வு ஏற்படுகிறது. எதையும் குறைவாக மதிப்பிடக் கூடாது. பரவசம் பரவசம்தான். சிலருக்கு பீத்தோவனைக் கேட்டால் பரவசம். சிலருக்கு விஜயின் படத்தைப் பார்த்தால் பரவசம். பரவசத்தில் உயர்வு தாழ்வு இல்லை என்பது என் கட்சி.
ஒரு நண்பருக்கு அம்ருதம் அத்தியாயத்தை மட்டும் அனுப்பி வைத்தேன். அரை மணி நேரத்தில் பதில் வந்தது. இரண்டு முறை படித்து, இரண்டு முறையும் கண்ணீர் சிந்தினாராம். இன்னொரு நண்பருக்கு இருபது தினங்களுக்கு முன் அனுப்பினேன். நான் எதையும் அனுப்பினால், ”படித்தீர்களா?” என்று மட்டும் கேட்கவே மாட்டேன். ஆனாலும் இருபது நாட்கள் ஆகி விட்டதால் கேட்டுத் தொலைத்தேன். நேரம் இல்லை என்று பதில் வந்தது. புரிந்துகொண்டேன். பத்து நிமிடமா கிடைக்கவில்லை என்று கேட்கக் கூடாது. அந்தப் படைப்பை வாசிக்கும் மனநிலையும் காலமும் அமையவில்லை என்றே அந்தப் பதிலைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கேகூட அப்படி ஆகிவிடும். கடவுள் வந்து கதவைத் தட்டி, ”பக்தா, வந்து வரம் கேள்” என்று கூப்பிட்டால்கூட, ”இல்லை ஸ்வாமி, பூனைகளின் பீ மூத்திரம் அள்ளிக்கொண்டிருக்கிறேன், இப்போதைக்கு நேரமில்லை, போய் வாருங்கள்” என்று சொல்லக்கூடிய நிலையில்தான் என் அன்றாட வாழ்வு அமைந்திருக்கிறது.
அது போகட்டும். என் நண்பருக்கு நிகழ்ந்த அதே உணர்வுதான் எனக்கும். எப்போது படித்தாலும் பரவசம். அந்தப் பரவச உணர்வை என்னால் தாங்க முடியாமல் போனதால்தான் என்னால் அம்ருதம் அத்தியாயத்தைப் பிழைதிருத்தம் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று அச்சுக்குப் போகும் நிலையில் பரவசத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று துணிந்து படித்து விட்டேன். பிழைகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் ’ச’வுக்குப் பதில் ’ஸ’ போட வேண்டியிருந்தது. அவ்வளவுதான்.
சில நண்பர்கள் சிறப்புப் பிரதிக்குப் பணம் அனுப்பிவிட்டு தங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை அனுப்பவில்லை. அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். ஏற்கனவே விவரம் அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப வேண்டாம். என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com
ராஸலீலா பதிப்பகத்தின் புதிய வெளியீடாக தியாகராஜா: கடவுளைக் கண்ட ஞானியின் கதை
இந்நாவலுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.
நூல் குறித்த விவரங்கள்:- மொத்தப் பக்கங்கள்: 900- இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.- இரண்டு பாகங்களும் இணைந்து அழகிய Box-இல் Set-ஆக வழங்கப்படும்.
முன்பதிவு சிறப்புச் சலுகை- புத்தகத்தின் அசல் விலை:1800Rs- 10% கழிவு- தபால் செலவு: இலவசம்
முன்பதிவு விலை: 1,620Rs மட்டும்!
இந்த நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.WhatsApp / GPay: 7339680708
Website:https://raasaleelapathippagam.com/
வங்கிக் கணக்கு விவரங்கள்:
Account Name: RAASA LEELA PATHIPPAGAM
A/c No: 25840200001634
IFSC Code: FDRL0002584FEDRL BANK
முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு டிசம்பர் மாதம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ராஸலீலா பதிப்பகம் 7339680708