தியாகராஜா – ஒரு புதிய விவரம்

தியாகராஜா நாவல் வடிவமைப்பு நிலையில் உள்ளது. அது என் கைக்கு வந்ததும் ஒருமுறை பிழைதிருத்தம் பார்த்து விட்டு அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டியதுதான். அநேகமாக செவ்வாய்க்கிழமை அச்சுக்குப் போய் விடும். 900 பக்கங்கள். அத்தனை பக்கமும் ஒரே நூலாக இருந்தால் எடுத்துப் படிப்பது கடினம். தடித்த அட்டை. தாள்களும் கெட்டி. அதனால் இரண்டு தொகுதிகளாகப் போடலாம் என்பது அச்சகத்தாரின் ஆலோசனை. அதன்படி இரண்டு தொகுதிகளாக ஒரு அட்டைப் பெட்டிக்குள் போட்டுக் கொடுக்கப்படும். இதற்குக் கொஞ்சம் அதிக செலவு எடுக்கும். … Read more

அருள் கொண்டு எழுதினது

மூன்று வாரம் இருக்கும். நாவலை முடித்து சில நண்பர்களுக்கு அனுப்பினேன். ஓரிரு தினங்கள் கடந்திருக்கும். என்ன சொன்னார்கள் என்று கேட்டாள் அவந்திகா. ஒரு சத்தம் இல்லை என்றேன். ஏன் என்றாள். ”எல்லாம் மெண்டலாகியிருப்பார்கள்” என்றேன். அவர்கள் ஆகிறார்களோ இல்லையோ, மூன்று மாதமாக நீ இருந்த கதியைப் பார்த்து நான் மெண்டலாகி விட்டேன் என்று ஒரு போடு போட்டாள் அவந்திகா. அதற்குப் பிறகு நாவல் பற்றி ராஜேஷும், சீனியும், இன்னும் ஓரிரு நண்பர்களும் நல்ல கருத்து சொல்லி என்னைத் … Read more

தியாகராஜா

தியாகராஜா நாவலை எழுதத் தொடங்கியது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு. சுமார் இருநூற்று ஐம்பது பக்கங்கள் எழுதியிருந்தேன். பிறகு அதை என்னால் தொடர முடியவில்லை. ஏன் தொடர முடியவில்லை என்பதற்கான காரணம் இப்போதுகூட எனக்கு சரியாகத் தெரியவில்லை. இன்னும் என்னிடம் ஏதோ குறைகிறது, இன்னும் ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டியிருக்கிறது என்ற உணர்வு மட்டும் இருந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில் நான் எங்கே சென்றாலும் என் நண்பர்களும் வாசகர்களும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போது தியாகராஜா வரும்? … Read more

அம்ருதம்

தியாகராஜா நாவல் சீனிக்குப் (அராத்து) பிடிக்கவே பிடிக்காது என்று நினைத்திருந்தேன். அதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. அவருக்கு அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்தேன். ஒருநாள் அழைத்தார். என் நாவல்களில் ராஸ லீலாதான் உச்சம் என்பது அவர் கருத்து. பலரது கருத்தும் அதுதான். ஆனால் அதையும் தாண்டி விட்டது தியாகராஜா என்றார். இதில் உருவாகியிருக்கும் தமிழ் இதுவரை தமிழ் கண்டதில்லை; இதை எழுதுவதற்காகத்தான் இதுவரை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொன்னார். நாவலை முடித்து விட்டேன். நாளை லே அவ்ட் … Read more

உயிரினும் மேலான ஒன்று…

தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருந்த போது ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் வேளையில் ஸ்ரீராமுக்கும் இன்னொரு நண்பருக்கும் அதுவரை எழுதிய நாவலை ஒட்டு மொத்தமாக அனுப்புவது என் வழக்கம். தினமும் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் சேரும். சேரச் சேர தினமுமே அனுப்புவேன். அவர்களுக்கு நான் ஏன் அப்படி தினமும் அனுப்புகிறேன் என்று சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கும் புரிந்திருக்காது. எனக்கு என்னுடைய மரண காலம் தெரியும். என்றாலும் என் உயிரை விட மேலான இந்த நாவலில் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ளக் கூடாது … Read more

அம்ருதம்

தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை நாவல் முடிந்து விட்டது. ஒரு லட்சம் வார்த்தைகள். மூன்று தினங்களுக்கு முன் முடித்து நாலைந்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அதைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே பலமுறை செய்ததுதான். ஒவ்வொரு அத்தியாயத்தையுமே பதினைந்து தடவைகளுக்கு மேல் சரி செய்திருப்பேன். இது இறுதியாக. இதில் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்துகொண்டிருக்கிறது. கடைசி அத்தியாயங்களில் கை வைக்கவில்லை. அது finale. சேர்த்துக்கொண்டிருப்பது நடுவில். இன்னும் பத்து தினங்களில் லேஅவ்ட் ஆர்ட்டிஸ்டிடம் … Read more