Shankar has mentioned you in hindu tamil interview of Brammarajan. Just wanted to send u, Charu.
– Sriram
“தமிழில் புதிய புனைவு எழுத்துகளை அன்று முயன்று, இன்று செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர்களான கோணங்கி, சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியவர் பிரம்மராஜன்.”
– ஷங்கர் ராமசுப்ரமணியன்
https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html
***
அப்படியெல்லாம் தாக்கம் செலுத்தவில்லை. எல்லோரும் நண்பர்களாக இருந்தோம். என்னோடு அதிகம் உரையாடியவர் நாகார்ச்சுனன் மட்டுமே. அதையும் தாக்கம் என்று சொல்ல முடியாது. நிறைய புத்தகங்கள் கொடுத்து உதவினார். சிந்தனையில் தாக்கம் என்று ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளையே சொல்லலாம். ஆனால் சிறுபத்திரிகை உலகில் என் எழுத்தை ஆபாசம் என்று பல மண்டுகள் உளறிக் கொண்டிருந்த போது பிரம்மராஜன் தான் என் எழுத்தைத் தகுந்த முறையில் அறிமுகப்படுத்தி மீட்சியில் ஒரு இடத்தையும் எனக்குக் கொடுத்தார். எப்படியோ கடைசியாக சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் என் பெயரைப் போடும் அளவுக்கு என் அறுபத்தாறாவது வயதில் ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். ஆகா.