பூச்சி 127: பாஸ்டனில் இட்லி கிடைக்குமா?

அப்பா,

பூச்சி 125 படித்தேன். ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. பிஸ்கட் பற்றி எழுதியிருந்தீர்கள். இப்போது கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிப்பதால் இங்கே நான் பிஸ்கட் (அமெரிக்காவில் குக்கீஸ்) சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். நீங்கள் இன்று ஞாபகப்படுத்திவிட்டீர்கள். இந்தியாவிலே எனக்கு இரண்டே இரண்டு குக்கீஸ்தான் பிடிக்கும்: அவற்றுள் இரண்டாம் இடம் குன்னூரில் கிடைக்கும் பட்டர் பிஸ்கட். நீங்கள் சொன்னதுபோல உப்பு பிஸ்கட்தான். குன்னூரில் இந்தியன் பேக்கரியில் கிடைக்கும் பிஸ்கட்டை பெருமளவில் புகழ்வார்கள். ஆனால் பெட்ஃபோர்டுக்கு அருகில் குறுகிய சந்து ஒன்றில் இருக்கும் வீடு ஒன்றில் செய்யப்படும் பிஸ்கட் அற்புதமாக இருக்கும். அதுவும் அடுமனையிலிருந்து இறக்கி சுடச்சுட கொடுப்பார்கள். முதலிடம் பூனேவில் கிடைக்கும் கயானி குக்கீஸ். தட்டச்சு செய்யும்போதே அதன் சுவையும் நினைவுக்கு வருகிறது. கயானி என்பது பேக்கரியின் பெயர். ஆர்மீனியர்கள் (ஜோராஸ்ட்ரியர்கள்) நடத்தும் கடை. பேக்கரி உணவுகள் செய்வதில் அவர்களுக்கெனப் பிரத்யேக செய்முறையிருக்கிறதா எனத் தெரியவில்லை. கயானி குக்கீஸ் உலகப்புகழ் பெற்றது. ஒருமுறை உங்களுக்கும் வாங்கி வந்தேன்; ஆனால் சந்திக்க முடியாததால் தரமுடியவில்லை. மன்னிக்கவும். அடுத்தமுறை எப்படியேனும் வாங்கி வருகிறேன். நம் திருநெல்வேலி அல்வா கடை போலச் சிறிய கடைதான். காத்திருந்துதான் குக்கீஸ் வாங்க முடியும். நான் வாங்கிவிட்டு வெளியில் வரும்போது நீண்ட வரிசையில் நின்றவர்கள் குக்கீஸ் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றத்துடன் சென்றார்கள். பாஸ்டன் வந்த பிறகு கிடைக்கும் குக்கீஸ் ரொம்பவும் திகட்டுகிறது. அத்திபூத்தது போல என்றாவது சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் சாப்பிடுவேன். ஒருநாள் வரலாற்று புகழ்பெற்ற மெடிச்சி (Medici) குக்கீஸ் சாப்பிட்டேன். இத்தாலிய சிற்றரச குடும்பமான மெடிச்சி பற்றி ஒரு சீரிஸ் வந்துள்ளது. மெடிச்சி குக்கீஸ் சாப்பிட்டுவிட்டால் வேறு எந்த வகையான குக்கீஸ் சாப்பிடவும் மனம் ஒப்புக்கொள்ளாது. அப்படியொரு சுவை! இதெல்லாம் இன்று காலை முதல் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அக்கார அடிசல் விவரம் தெரிந்ததிலிருந்து சிலமுறையே சாப்பிட்டிருக்கிறேன். அதைப் பற்றி வேறு எழுதி ஆசையை வளர்த்துவிட்டீர்கள். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசி அடுத்தமுறை இந்தியா வரும்போது எப்படியாவது சாப்பிட்டுவிட வேண்டும். என் அம்மா வீட்டில் நெய் காய்ச்சுவார்கள். அந்த நெய்யை பயன்படுத்தி அக்கார அடிசல் செய்ய வேண்டும். வாழை இலையில் சூடாக நெய் வந்தோட அக்கார அடிசல் சாப்பிட வேண்டும். பாருங்கள் அக்கார அடிசல் பற்றி எழுதி எப்படி மனதைக் கெடுத்துவிட்டீர்கள்! அதுவாவது பரவாயில்லை, இட்லியை பற்றி எழுதி ரொம்பவும் என்னைச் சங்கடபடுத்திவிட்டீர்கள். இட்லி சாப்பிட்டு இன்றோடு ஒன்றரை வருடமாகிவிட்டது. இன்னும் எட்டு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். அதுவும் சின்ன வெங்காய சாம்பார் பற்றி எழுதி பசியைத் தூண்டிவிட்டீர்கள். இந்த வருடம் பெரும் முயற்சி எடுத்துச் சமைக்கக் கற்றுக்கொண்டேன். சமீபத்தில் ஒரு தமிழ் குடும்பத்தினரை பார்க்க போகும்போது சிக்கன் கிரேவி செய்து எடுத்துபோனேன். கண்கள் பனிக்க (காரத்தினால் அல்ல) அந்த மனிதர் என் அம்மா சமைப்பது போல இருக்கிறது என்று கூறினார். பிரியாணி செய்த போது என் நண்பனும் அப்படிதான் கூறினான். எனக்கும் என் சமையலை சாப்பிட்டால் அப்படிதான் தோன்றுகிறது (பணிவுடனே சொல்கிறேன்). நம்ப மறுத்தாலும் சமையலிலும் நீங்கள்தான் என் குரு. ஒருமுறை சச்சின் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க மறந்து நீங்கள் கொத்த மல்லி நறுக்கும் நேர்த்தியை பார்த்துக்கொண்டிருந்த நண்பரைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.

அதேபோல தயிர் சாதம் செய்வதைப் பற்றிய குறிப்பு அற்புதம். ராஸ லீலாவில் நீங்கள் குறிப்பிட்ட வேப்பிலைக்கட்டிக்கு நிகர் எதுவுமிருக்கிறதா என்ன! அதே போல மாசிக் கருவாடு செய்யும் முறை தெய்வீகம்!

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, உங்கள் பதிவைப் படித்தபின் ஏதாவது இந்திய உணவு சாப்பிட மனம் அலைமோதுகிறது. நீங்கள் சொல்வது போன்று இட்லி எல்லாம் சாப்பிட, அமெரிக்கத் தமிழர்கள் போன ஜென்மத்தில் எதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். இட்லியை நினைக்கவே கூடாது. மீன் புட்டு செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் வேறொரு நண்பன் அழைத்ததாலும் ரொம்ப நாளாகப் போக வேண்டும் என்ற சிந்தித்துக் கொண்டிருந்ததாலும் இன்று மதியம் Chick-fil-A செல்கிறேன். சிக்கன் பர்கர். இங்கே உள்ள தமிழர்கள் Chick-fil-A குறித்து உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களா? இதைப் பற்றி மட்டுமே நான்கு பக்கம் எழுத முடியும். பிறகொருமுறை அதைப் பற்றி விரிவாகச் சொல்கிறேன்.

வளன்

வளன் தன் கடிதத்தில் குறிப்பிடும் Chick-fil-A இங்கே இந்தியாவில் இல்லை.  ஆனால் கே.எஃப்.சி. என்று ஒரு தண்டக் கருமாந்திரம் உள்ளது.  என் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒன்று.  ஆனால் எதையும் வாயில் வைக்க வழங்காது.  ஒவ்வொரு பிராஞ்சும் ஒவ்வொரு ருசியாய் இருக்கிறது.  எந்த பிராஞ்சில் நன்றாக இருக்கும் என்பது ஹார்லண்ட் ஸாண்டர்ஸுக்கே வெளிச்சம். 

இதையெல்லாம் ஒரிஜினலாகப் பார்த்து விடலாம் என்றுதான் அமெரிக்க வீசா கேட்டேன்.  பாவிகள் கொடுக்கவில்லை.  இதோடு மூன்றாவது தடவையோ நான்காவது தடவையோ மறுக்கிறார்கள்.  அந்த மறுப்பு தினத்திலிருந்து பணத்துக்கும் எனக்குமான உறவே தலைகீழாக மாறி விட்டது.  நாலாயிரம் ரூபாய்க்கு முகப்பூச்சு வாங்கிக் கொண்டிருந்தவன் இப்போது நாலு ரூபாய் கூட செலவு செய்வதில்லை.  இனி மேலும் ஒருமுறை உன் அக்கவுண்ட்டில் பைசா இல்லை, உனக்கு வீசா கிடையாது என்று ஒரு பயல் சொல்லக் கூடாது.  என்ன, அடிக்கடி அவந்திகாவிடமிருந்துதான் விமர்சனக் கணைகள்.  பாரதி மாதிரி வாழ்ந்தவன் இப்படிக் கஞ்சனாகி விட்டனாயே? நான் என்ன செய்வது?  நான் அமெரிக்கா போயே ஆக வேண்டுமே? 

அப்படி அமெரிக்காவில் என்ன இருக்கிறது?  அந்த பிரம்மாண்டமான நிலம்தான் என்னைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது.  முக்கியமாக இரண்டு ரயில் பிரயாணங்கள் செய்ய வேண்டும்.  சிகாகோவிலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோ வரை செல்லும் California Zephire. சுமார் 4000 கி.மீ. தூரத்தை இரண்டு நாட்களில் கடந்து ஓடும் ரயில்.  Sierra Nevadaவின் பனிமலைகள், கொலராடோ நதி, மிஸிஸிபி நதி போன்ற பலவிதமான இயற்கை அதிசயங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.  இதில் இன்னொரு சௌகரியம், 650 டாலர் டிக்கட்டில் இரண்டு பேர் பயணிக்கலாம்.  ஒருத்தருக்கு டிக்கட் உண்டா என்று தெரியவில்லை.  மேலும், நாம் நினைக்கின்ற ஊரில் இறங்கி, மறுநாள் வரும் ஸஃபையரில் ஏறிக் கொள்ளலாமா என்றும் தெரியவில்லை.  ஒரு வாரம் போல் வழியில் உள்ள நகரங்களில் இறங்கி தங்கி விட்டு ரயிலைப் பிடிக்கிறாற்போல் இருந்தால் நலம். 

அதேபோல் Death Valleyயையும் பார்க்க வேண்டும்.  அதிக பட்சம் 50 டிகிரி இருக்கும்.  என்னுடைய நிரந்தர விலாசமே Death Valleyதான் என்பதால் அமெரிக்க Death Valley ஒன்றும் பிரச்சினையாய் இருக்காது.  மேலும், வெயில் கொடுமையால் அங்கே யாருக்கும் அத்தனை பிரச்சினை வருவதில்லை.  விஷ ஜந்துக்கள் கடித்துத்தான் இறந்து போகிறார்கள், அதனால் கண்ட இடங்களில் கையை வைக்காதீர்கள் என்கிறார்கள் அனுபவசாலிகள்.  இப்படியெல்லாம் சில திட்டங்கள் வைத்திருந்தேன்.  கொரோனா கெடுத்து விட்டது. 

சரி, பாஸ்டனில் இட்லி கடை இல்லையா என்ன?  அது போகட்டும்.  பாஸ்டனில் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்கிறார்களே?  அவர்களில் ஒருத்தர் கூடவா வளனின் நட்பு வட்டத்தில் இல்லை?  அதுசரி, பாஸ்டன் தட்பவெப்பத்துக்கு இட்லி வருமா?  எனக்கு இட்லி என்றதும் திருநெல்வேலி ஆச்சிகள் உரலில் இட்லி மிளகாப் பொடி இடிப்பார்கள், அது ஞாபகம் வருகிறது.  பொடியை எடுத்து டப்பாவில் போட்டு விட்டு, உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மொளகாப் பொடியில் சூடான இட்லியைத் தொட்டுத் தொட்டுக் கொடுப்பார்கள்.  ஆஹா, என்னமாய் இருக்கும்!  அதேபோல் நான் ஒரு துகையல் செய்வேன்.  என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.  இருபத்தைந்து காய்ந்த மிளகாய்.  மேல் காம்பை நீக்கி விட வேண்டும்.  அதை மிக்ஸியில் போட்டு, ஒரு நாலைந்து கல் உப்பு, புளியங்கொட்டை சைஸ் புளி, நாலு பூண்டு (தோலோடு) எல்லாவற்றையும் நைஸாக அரைக்க வேண்டும்.  ரொம்ப நைஸாக அரைக்க வேண்டும்.  கொழகொழவென்று பட்டுபோல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் நல்லெண்ணெயைக் கலந்து அடிக்க ரசமாக இருக்கும்.  தாளிக்கக் கூடாது.  ஆவி பறக்கும் இட்லியின் மீது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு இந்தத் துகையலை லேஸ் லேஸாகத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் உச்சந்தலை மயிரைப் பிடித்து இழுப்பது போல் இருக்கும்.  வேண்டியவர்கள் துகையலிலும் நல்லெண்ணெயை ஊற்றிக் கொள்ளலாம்.  ஒரு பத்து இட்லியையாவது உள்ளே தள்ளலாம். 

சே, என்ன இது, இந்த இட்லி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறதே? 

MacAir இங்கே சென்னையிலேயே வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் அனுப்பலாம். 

பின்வரும் நண்பர்களின் முகவரி தேவை.  ராஸ லீலா கலெக்டர்ஸ் காப்பி தயாராக உள்ளது.  அனுப்ப வேண்டும்.

நீதிப்பாண்டி

யோகேஷ்வர் ஸ்ரீகிருஷ்ணன்

அன்பழகன்

வினோபன்

அஸ்வினி

கேசவமணி

காந்தி

மோகன் நடராஜ்

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai