184. அந்த வெளிர்நீலப் புள்ளி…

அன்புள்ள சாரு, 

எப்போதும் எனக்குள்ளே ஒரு கர்வம் இருக்கும் – என் சிந்தனைகள் என் சார்புகள் எல்லாம் என்னாலே என் மூலம் உருவானது, நான் சுயம்பானவன் என நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் சிந்தனைகளின் ஆழத்தில் சென்று பாத்த்தால் அது எல்லாமே உங்களைப் படித்து, நீங்கள் பேசியதைக் கேட்டு உங்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதுவாகவே நான் மாறியிருக்கிறேன் என்பதே நிஜம். 

என்னை உருவாக்கிய உங்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு.

இந்த வீடீயோவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் சாரு, இதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நீங்கள் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். இந்த வீடியோவில் சொல்ல வரும் கருத்துக்கள் கூட நீங்கள் ஏற்கனவே பல முறை கூறியவை தான் சாரு, இறைவன் படைத்ததை மீண்டும் அவருக்கே படைப்பது போல் இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சாரு இன்று மாலைக்கான zoom meetigல் கலந்துக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன், link தர முடியுமா?

அன்புடன்

கார்த்திக்

வளனைப் போலவே கார்த்திக் என்னுடைய இன்னொரு பிள்ளை.  கார்த்திக், முத்துக்குமார், ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் இல்லையேல் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.  என் குடும்பத்தில் ஒருவர் கார்த்திக்.  நானாக யாருக்கும் லிங்க் அனுப்பாததன் காரணம், நான் அனுப்பி அவர்களால் வர முடியாத சூழல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போகுமே என்றுதான்.  மேலும், கார்த்திக் எல்லாம் மனோவிடம் கேட்டுக் கொண்டு உள்ளே வர வேண்டியதுதானே?  இது அவர் வீடு.  நான் போய் சீனிக்கு லிங்க் அனுப்புவேனா?  அது போல. 

கார்த்திக் கொடுத்திருக்கும் இணைப்பில் வரும் கார்ல் சகானின் உரையைக் கேளுங்கள்.  மூன்று நிமிடம்தான்.  அது ஓர் அற்புதம்.

***

என்ன சொல்வதென்று தெரியவில்லை சார். Will love you till my last breath.

உங்கள் பிறந்தநாள் அன்று உங்கள் மனதில் இருந்துள்ளேன் என்பதே பிறவிப்பயன் தான் (டச் வுட் )

அனைவரும் உங்களை தகப்பனாக ஏற்றுக் கொண்டதாக சொல்கின்றனர். நான் சொல்ல வேண்டியதே இல்லை, தகப்பன் பொருளுக்கோ, ஞானத்துக்கோ, ரத்த வாரிசாகவோ பலவாறாக இருக்கலாம். ஆனால் இளைஞர்களுக்கு உற்ற தோழன் மிகவும் குறைவு.

ஒன்று, அறிவுரை; அல்லது அடக்குமுறை இது மட்டும்தான் கிடைக்கும். தோள் மீது கை போட்டுப் பேசும் குரல்கள் குறைவு, அவ்வாறாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்தான் அதிகம்.

நம்பிக்கையான குரல்கள் மிகவும் குறைவு, தன் சொந்த வாழ்வு எந்த விதத்திலும் வெளித்தெரியாமல் ஊருக்கு உபதேசம் செய்யும் குரல்களினால் சலிப்படைந்து, (இந்த இடத்தில்தான் இளைஞர்கள் உங்களிடம் ஈர்ப்பு கொள்கிறார்கள் ).வெளியே சொல்ல முடியாத குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, குடி, மனப்பிறழ்வு, சரியாக யோசிக்கின்றோமா அல்லது தவறா?…  என்றெல்லாம் குழம்பிய தருணத்தைத் தாண்ட முயற்சி செய்த உங்களை தகப்பன் என்றோ, ஆசான் என்றோ, எப்படி இருந்தாலும் நீங்கள் சாரு, just சாரு… யாரோடும் ஒப்பிட முடியாத சாரு, the writer, the man who wrote Zero degree, Exile, Rasa Leela…….

இதுவே மறுக்க முடியாத உண்மை.

கோபிநாத்.

***