பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது. எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது. சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன். எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும். இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் சில பகுதிகளை அவர் விரிவாக எழுதியிருப்பதைக் கண்டேன். அதையெல்லாம் இந்தக் காலத்து இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. சென்ற மாதம் ஒரு வித்தியாசமான இடத்திலிருந்து சுநீல் கிருஷ்ணனின் பெயரைக் கேள்விப்பட்டேன். புதுச்சேரியில் சி.எஸ். ராமகிருஷ்ணன் என்று ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் காயத்ரியின் பெரியப்பா. அவர் ஒரு காந்தி வல்லுனர். நம்மிடம் காந்தித் தாத்தா என்று சொன்னால் மகாத்மா காந்தி என்று நினைப்போம். ஆனால் காயத்ரி காந்தித் தாத்தா என்று சொன்னால் அவளுடைய அம்மாவின் அப்பா. அம்மாவின் அம்மா காந்திப் பாட்டி. ஏனென்றால், அந்தத் தாத்தா ரொம்பத் தீவிரமான காந்தி தொண்டர். குடியிருந்தது கூட காந்தி நகர்தானாம். இப்படி காயத்ரி குடும்பத்தில் பல காந்தித் தாத்தாக்கள். சி.எஸ். ராமகிருஷ்ணன் அவரது ஆயுள் முழுவதும் காந்தி குறித்த ஆய்வுகள் செய்து காந்தி பற்றிய அரிய நூல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். எல்லாம் ஒரு நூலகம் அளவு வரும். இதையெல்லாம் அரசாங்கமும் பல்கலைக்கழகங்களும்தான் பொறுப்பு எடுத்துக் கொண்டு பாதுகாக்க முன்வர வேண்டும். ராமகிருஷ்ணனின் வாரிசுகள் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும்? குடும்பத்தில் எல்லோருமே ராமகிருஷ்ணன் போல் தியாகியாக வாழ இயலுமா? அந்த ராமகிருஷ்ணன் சுநீல் கிருஷ்ணன் பற்றிப் பேசினாராம்.
***
வி. சுதர்ஷனின் வாழ்த்து:
இந்த முறை நம் சாருவுக்கு ஏகப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஏன் திடீரென இவ்வளவு பேர் சாருவை கொண்டாடுகிறார்கள்? சாரு ஒரு hedonist. இந்தக் கணம், இந்த நொடி தான் அவருக்கு முக்கியமான தருணம். ஜெ கிருஷ்ணமூர்த்தி, ஒஷோ போன்றோரின் தத்துவங்களை just like that வாழ்ந்து காட்டுகிறார். வாழ்க்கை என்பதே அவருக்கு ஒரு கொண்டாட்டம்தான்.ஏன் பலர் பொறாமை கொண்டு அவரை இகழ்கின்றனர்? very simple. அவர்கள் தாங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை சாரு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜாதி, மதம் பாராமல் அனைவரையும் அரவணைத்துப் பழகும் பண்பை அவரிடம் காணமுடியும். குறிப்பாக இஸ்லாம் பற்றிய வெறுப்புணர்வை என் மனதில் இருந்து அகற்றியது சாரூவின் எழுத்து தான். பிஸ்மில்லா கானுக்கு காசி விஸ்வநாதர் காட்சி தந்த தருணம் எத்தனை பேருக்குத் தெரியும்? ” “கடவுளும் நானும்” என்ற அந்த கட்டுரையை படித்த அடுத்த கணத்தில் என் மனதிலுள்ள கர்வம், வெறுப்பு, அகந்தை அனைத்தும் அழிந்தது. சாருவிடம் நீங்கள் இஸ்லாமிய இலக்கியம், வைஷ்ணவம், தலித் இலக்கியம் என எதைப் பற்றியும் விவாதிக்கலாம், அவற்றின் சாரங்களை அறிந்து கொள்ளலாம்.
சாருவிடம் நாம் எதைக் கற்க வேண்டும்? இந்தத் தருணத்தில் வாழுங்கள் என்பதுதான். வாருங்கள் நாம் சாருவைக் கொண்டாடுவோம்.
and many more returns … dedicating my drunken song lachavathiye from 4students and thx to the creator Jessie …
Charu u are an immortal not only thru your writings but also thru different art form you touched thru ur blogs , yes am referring to the blog from circa 2005 on this song lachavathiye … it was blasted by your friend outside a famous club in Chennai … (gun/jamin)
Charu cheers and I wish you everything this universe can offer
Ok how Charu helped an immigrant in canada from who almost got lost in the new world he choose to live without knowing the trauma of living in the new world… for me from 2002 to 2010 his writing was my pulsar star … and His writings gave me confidence that my whining is just because, am just out of my comfort zone
and taught me not to give a F**K …
thx Charu
PS. am just a wannabe moronic singer so please apologize for messing up one of ur favorites
இப்படி முகநூலில் எழுதி கையில் போத்தலுடன் லஜ்ஜாவதியே பாடலையும் பாடி காணொலியாக எடுத்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார் வீரேஸ்வரம் வினோத்.
இதையெல்லாம் இங்கே நான் பதிவு செய்வது ஏதோ பெருமைக்காக அல்ல. அந்த நிலையைத் தாண்டி வெகுகாலம் ஆகிறது. ஒருவரின் எழுத்து எந்த அளவு சமூகத்தின் பல பகுதிகளிலும் பாய்ந்து பலரது வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதை நானே உணர்ந்து கொள்வதற்காகத்தான் இதையெல்லாம் எடுத்து இங்கே பதிவு செய்கிறேன். தமிழில் எழுதி என்ன பயன் என்று நானே பல நூறு முறை புலம்பியிருக்கிறேன். ஆக, இதையெல்லாம் இங்கே பதிவிடுவது எனக்காகவேதான். நம்முடைய எழுத்து எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது, யார் யாருடைய வாழ்க்கையையோ மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை எனக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காகத்தான்.
2004-இல் பரத், கோபிகா நடித்த 4 the people என்ற மலையாளப் படத்தின் லஜ்ஜாவதியே பாடலை ஒருநாள் சின்மயா நகர் பாரில் வைத்து நண்பர்களுடன் கேட்டேன். அந்த நண்பர்கள் யாரும் இப்போது என்னுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் யார் என்பதும் எனக்கு மறந்து விட்டது. அது ஒரு பாடாவதி பார். அப்போதெல்லாம் நவீனமான பார் என்று எதுவும் கிடையாது. நவீனம் என்றால் ஸ்டார் ஹோட்டல்தான். சின்மயா நகரே அப்போது ஒரு பாடாவதி ஊர்தான். இப்போது எப்படி இருக்கிறதோ தெரியாது. கோயம்பேடு பக்கம். அந்தப் பக்கமெல்லாம் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். முகப்பேர் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடையலாம். அடைந்தும் விட்டன. ஆனால் கோயம்பேடு சின்மயா நகரெல்லாம் வளர்ச்சி அடைவதற்கான எந்த சாத்தியமும் அப்பகுதிகளின் அமைப்பிலேயே இல்லை.
அந்தப் பாடாவதி ஊரின் பாடாவதி பாரில் வைத்து லஜ்ஜாவதியே கேட்ட க்ஷணம் அந்தப் பாடலின் மீது பித்தாகி விட்டது. அதைப் பாடிய ஜாஸி கிஃப்ட் மீதும். எட்டு மணிக்கு ஆரம்பித்து பன்னிரண்டு மணி வரை தொடர்ந்து அந்தப் பாட்டையே திரும்பத் திரும்பப் போடச் சொல்லி கேட்டேன். அடுத்த வாரம் அந்தப் பாடலைக் கேட்பதற்காகவே அங்கே போனேன். கேஸட்டை ஓனர் எடுத்துக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னான் பையன். பொய் சொல்ல மாட்டான். ஓனர் மலையாளி. அதெல்லாம் நேற்று வீரேஸ்வரம் வினோத்தின் பதிவைப் படித்ததும் ஞாபகம் வந்தது.
(லஜ்ஜாவதியே பாடல்)
வெறுமனே வாழ்த்து சொல்லாமல் இதுபோல் கொஞ்சம் விளக்கமாகவே எழுதியிருந்தார்கள். சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து கூட ஒரு செய்தியைச் சுமந்தபடிதான் இருந்தது. இறைசக்தியின் ஆசியுடன் இந்த ஆண்டு நடக்கும் என நினைக்கிறேன்.
பதினெட்டாம் தேதி மாலை ஏழு மணிக்கு எந்தத் திட்டமும் இல்லாமல் நண்பர்கள் யாவரும் ஸூம் மூலமாக இணைந்தோம். பாக்யராஜ், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், மஹி என்ற மகேந்திரன், நிர்மல், பிரபு, கார்த்திக், வளன், கணேஷ், சிவராமன், சுதர்ஷன், பொன்ராஜ், தாரணி, சீனி, காயத்ரி, புவனேஸ்வரி, ராம்ஜி, சோமசுந்தரம், அஸ்வினி, அடியேன். சந்திப்பு பதினோரு மணி வரை நீண்டது. அரட்டை எதுவும் இல்லை. சோமசுந்தரம்தான் என் கர்னாடக இசைக்கான குரு. கே.வி.என்.னின் சிஷ்யர். பிரபலமாவதைத் தவிர்த்து விட்டு ஞானியைப் போல் வாழ்பவர். மோகமுள் ரங்கண்ணா போன்றவர். பிரம்மச்சாரி. உலக சினிமாவும் இலக்கியமும் அறிந்தவர். பதினைந்து ஆண்டுகளாக நண்பர். ஒரு ஆயிரம் பக்கத்துக்கான நாவல் விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். சொல்லிக் கொண்டும் இருக்கிறார். சங்கீதம் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். இப்போது கற்றுக் கொண்டால் 68 வயதில் சங்கீதம் கற்ற ஆள் என்ற பேர் எடுக்கலாம். யாராவது இந்த வயதில் சங்கீதம் கற்றிருக்கிறார்களா? கற்கத்தான் முடியுமா? எனக்கு எதில் நுழைந்தாலும் அதன் ஆழத்தைத் தொட்டு விட வேண்டும். செம்பையின் சீடனாக இருந்திருந்தால் யேசுதாஸ் மாதிரி இருந்திருக்க மாட்டேன். செம்பையைத் தாண்டியிருப்பேன். பாவம், செம்பையின் நிழலைக் கூட யேசுதாஸால் தொட முடியவில்லை. சீடன் ஒரு குருவுக்கு செய்யக் கூடிய ஆகப் பெரிய நன்றிக் கடன் அவரைத் தாண்டுவதுதான் என்று நான் நம்புகிறேன். இலக்கியத்தில் அப்படி நடந்து கொண்டே இருக்கிறது. மிகச் சமீபத்திய உதாரணம், சு.ரா.வைத் தாண்டிய ஜெயமோகன். சங்கீதத்திலும் கூட அப்படி ஓரிரு முறை நடந்திருக்கிறது. புரந்தர தாஸரை அவருக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய தியாக பிரம்மம் தாண்டி விட்டார்தானே?
ஆனால் என்னால் சங்கீதத்தில் மாணவனாக முறையாகக் கற்றுக் கொள்ள இயலாது. என் முழுமையான பணி இலக்கியம். என் நேரம் முழுவதையும் அதற்கே நான் ஒப்புக் கொடுத்தாக வேண்டும். அதனால் சங்கீதம் பற்றிய அடிப்படைப் புரிதல்களை மட்டும் சோமனிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். அவர் எனக்காக மட்டுமே பாடி அனுப்பும் கீர்த்தனைகளையும் கேட்டு ரசிக்கிறேன். உங்களிடம் பகிர்ந்தால் கோபித்துக் கொண்டு அனுப்பாமல் இருந்து விடுவார். ஏற்கனவே அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தை எழுதினால் ”எதற்கு ஓய், நம்மைப் போட்டு வம்பில் மாட்டி விடுகிறீர்?” என்று சண்டைக்கு வருகிறார். அதனால் வாயை மூடிக் கொண்டு எனக்குக் கிடைப்பதை பெயர் சொல்லி acknowledge செய்யாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். எல்லோரும் ஏன் பெயரைப் போடவில்லை என்று சண்டைக்கு வருவார்கள். இவர் ஏன் பெயரைப் போட்டாய் என்கிறார். நல்லது. சோமனை ஒரு ஊத்துக்காடு கீர்த்தனையைப் பாடச் சொல்லலாம் என்று யோசித்தேன். பாடியும் இருப்பார். ஆனால் என் நண்பர்கள் கர்னாடக சங்கீதம் ரசிப்பார்களா என்பது எனக்கு சந்தேகம். ஒரு கலைஞனை அப்படி நாம் தர்மசங்கடப் படுத்தக் கூடாது என்று விட்டு விட்டேன்.
எனக்கு சத்ய நாராயணன் என்று ஒரு நண்பர் உண்டு. ம்யூசிக் டைரக்டராக ஆக முயற்சியில் இருக்கிறார். மிகப் பெரிய திறமைசாலி. சினிமாவில் நிச்சயம் பெரிய ஆளாக வருவார். என்னுடைய கவிதை வாசிப்புகளில் பின்னணி இசை இவர்தான். இவரது பின்னணி இசையில் என் கவிதைகள் அனைத்தையும் என் குரலில் வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஃப்ரெஞ்சில் மிஷல் வெல்பெக் அப்படி வாசித்த கவிதைகள் அவரை அங்கே ஒரு ராக்ஸ்டார் அளவுக்குப் பிரபலப்படுத்தி இருக்கிறது. அவர் அங்கே ஒரு பாப் பாடகர். பார்த்தால் அவர் கவிதைகளை மிக அற்புதமான பின்னணி இசையில் வாசிக்கிறார். அவ்வளவுதான். பதினெட்டாம் தேதி சந்திப்புக்கான விவரங்களை அனுப்பச் சொல்லி பல முறை எழுதினார். இதோ அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டே அனுப்ப மறந்து போனேன். அனுப்பியிருந்தால் கலந்து கொண்டிருப்பார். அவர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஏஎம் ராஜா பாடலைப் பாடி அனுப்பியிருந்தார். படம் தேன் நிலவு. பாட்டுப் பாட வா. தமிழ் சினிமா இசையில் எனக்கு ஆகப் பிடித்த பாடகர் என்றால் அது ஏ.எம். ராஜா தான். பி.பி. ஸ்ரீனிவாஸ் கூட அதற்கு அடுத்துதான். அதற்குப் பிறகு வந்த யார் குரலும் என்னை ஈர்க்கவில்லை. இந்த இரண்டு குரல்களும் யாராலும் தொட முடியாதவையாகயும் நகல் செய்ய முடியாதவையாகவும் உள்ளன. மலையாளத்தில் ஜெயச்சந்திரன் குரல் அப்படிப்பட்டது. சத்யாவின் குரலைக் கேட்ட போதுதான் அவர் பாடவும் செய்வார் என்பதே தெரிந்தது. இனி வருவது சத்யாவின் வாட்ஸப் செய்தியும் பாடலும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு.
பலரும் சொல்வது போல் உங்கள் எழுத்து என் வாழ்விலும் மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. கொஞ்சமேனும் sensible ஆன ஆளாக நான் இருக்கிறேன் என்றால் அது நிச்சயமாக உங்களை வாசித்துக் கொண்டிருப்பதால்தான். நண்பர்களுடனான எந்த உரையாடலிலும் உங்கள் பெயரை உச்சரிக்காமல் என்னால் பேச முடிவதில்லை.
உங்களுக்கு எங்கள் எல்லோரிடமிருந்தும் நிரம்பித் ததும்பும் அன்பும் நன்றியும்.
Thanks a lot for inspiring us Charu. Love you!
(எனக்குப் பிடித்த) ஏ.எம்.ராஜாவின் இந்தப் பாடல் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் (பயமும் தயக்கமும் இருந்தாலும்) உங்களுக்காக பாடி அனுப்பலாம் என்று ஆசை வந்தது. Recording studio வில் record செய்யலாம் என்றிருந்தேன். ஆனால் நேரம் ஒத்து வராமல் போய்விட்டதால் mobile ல் record செய்துவிட்டேன். Sound clarity குறைவுதான். மன்னிக்கவும்.
***
இதற்கு முன் இல்லாத வகையில் தங்கள் இந்த பிறந்த நாள் வெகு சிறப்பாக சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது இதுவும் ஒரு மாற்றம் தான் எனத் தோன்றுகிறது, இதற்குக் காரணம் தாங்கள் இந்த ஆண்டு முழுவதும் முகநூல் வழியாக எழுதிய கட்டுரைகள் நிறைய பேரை சென்றடைந்து உள்ளது என நான் நம்புகிறேன், புத்தகங்கள் வாயிலாக தாங்கள் எழுதியதை விட இந்த சமூக வலைதளங்களில் நீங்கள் எழுதியவை அனைத்தும் நிறைய பேரை சென்றடைந்துள்ளது, மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா.
ராஜதுரை சீனிவாசன்
***
பின்வரும் ஆங்கிலக் கடிதத்தையும் படித்துப் பாருங்கள். இதை எழுதியிருக்கும் அர்ஜுன் மோகன்.
Dear charu,
Warm evening greetings.
First things first : MANY MORE HAPPY RETURNS OF THE DAY!!! May your life be filled with abundance of
good luck(I’ve heard you say touch wood so I believe you believe in luck too), good health and may you spread your epicurean hedonistic aura , charm and wisdom forever enlightening us everyday.
To put things shortly : YOU ARE TRULY A TREASURE TO THE WORLD OF POST-MODERN LITERATURE!!!
I’ve always recognised myself as a very nostalgic person and as I twitchy thumb this letter , my mind takes me down one helluva memory lane. Discovering your works was truly an Eureka moment for me.
During my high school years I never held a high regard for contemporary tamil lit.
I’ve just read the classics and a few insipid other works of writers who feigns modernity but were stuck with stereotypical thoughts. I thought tamil literature was still stuck in back in time like a ghost town(Ashokamitran was an exception for whom I had and still have a very high regard for) . That was the time I was high on Ginsberg , Brautigan , Hawkes , Acker , Calvino , Lyotard , Pynchon and Nabokov and thought nothing can get close to them.
And then when I was in 11th grade during the book fair amidst heaps of run-of-the-mill works and poor cookbooks and self help ad nauseams I found your works and you took me down like a storm , breaking down all my stereotypical views that I held with post modern tamil literature. I was testing waters with world cinema and was searching for the works of glauber Rocha and voila I found your name again. Then became an ardent follower of your blog from 2015 which as I always say is a treasure trove . I’ve promptly made my presence to several of your speeches (la.cha.ra’s one during the rains really holds strong in my memory) . pazhuppu nira pakkangal is hands down one of the best literary homage to tamil literature. One can never spot a inferior work in your entire oeuvre. Waiting badly for your books on cats and ashoka!
– An Absolute Hedonist.
-A True Connoisseur.
– Francophile.
– -Auteur
– A writer who lives the way he writes might be a common sighting , but to find someone whose writings as a source of their existence is very rare.
-your writings cannot be dissected or deconstructed through any forms of formal literary theories , for you a breed apart as your narrative structure is not borrowed from Dante or Borges , but rather your narrative structure blooms from your existence . Like a spider that extruded it’s protein through its spinnerets into silky web , similarly your narrative is a metamorphosis of your existence and your witness consciousness of the worldly aberrants and social paranoia into pleasure of text.
My limbic system of my brain due to the overwhelming rush of nostalgic and precious memories associated with you ,falters me to express my gratitude through linguistic terms. Thanks again for taking time to answer the many mails and texts from me. Your writings, conversations and references truly mold me into a better person acting as an enabler to understand the self better.
Once again a very happy birthday ! Like Shakespeare said : With mirth and laughter let old wrinkles come!!!
Beloved Reader,
Arjun Mohan.
***
அன்புக்குரிய சாரு,
உங்கள் இளம் வாசகன் கண்ணனின் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நம் இருவருக்கும் பிடித்த ஆண்டாள் நாச்சியாரின் மாதமான மார்கழி மூன்றாம் நாள் இன்று. இன்றைய பாசுரத்தின் வரிகளை கொண்டே எனது வாழ்த்துகளை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்கிறேன்.
அசோகா, அதைத் தொடர்ந்து வரப்போகும் நாவல்கள், வெளிநாட்டு பயணங்கள், உங்கள் நூல்களின் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அனைத்து எண்ணங்களும் நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
“நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.”
அளவற்ற அன்புடன்,
கண்ணன்.
***
Dear Charu
You have shaped me,You have made me a better, kinder, and more thoughtful person through your words At this very moment, I am unable to find a suitable word to express my gratitude.
Words alone are not enough to express how happy I am you are celebrating another year of your life! Just when the caterpillar thinks that it is all grown up, it becomes a butterfly. Happy birthday, butterfly.
S.
***
அன்புள்ள சாரு,
முதலில் உங்களுக்குp பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் நீண்ட ஆயுளோடும், நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என குலதெய்வத்தையும் மற்றும் எங்கள் தாயார் ஆண்டாளையும் வேண்டிக் கொள்கிறேன்.. எழுத்தாளர்களுக்கு வயது ஓர் தடை இல்லை என்றாலும் ஆரோக்கியம் அவசியம் என நினைக்கிறேன். நான் சென்னையில் கன்னிமாரா பொது நூலகத்தில் உங்கள் இரண்டு புத்தகங்களை படித்துள்ளேன்., ஒன்று நிலவு தேயாத தேசம் மற்றொன்று நாடோடியின் நாட்குறிப்புகள்.. முழுவதுமாக படிக்கவில்லை மன்னிக்கவும், நான் படித்தவரையில் அற்புதமாக இருந்தது.50 ஆண்டு கூபா கம்யுனிச நிறை மற்றும் குறைகளை அழகாக கூறியுள்ளீர்கள்.எனது மாமா உங்கள் வாசகர் அவர் மூலமாக உங்களையும் உங்கள் எழுத்தையும் பின் தொடர்கிறேன்.
இப்படிக்கு எளிய வாசகன்:
கண்ணன்,கூமாப்பட்டி, திருவில்லிபுத்தூர்..