நண்பர்களை ப்ளாக் பண்ணிய காதை (சற்றே மாற்றியது!)

முகநூலில் நண்பர்களை அவ்வப்போது ப்ளாக் செய்வது என் வழக்கம்.  சென்ற வாரம் அப்படி இரண்டு நண்பர்களை ப்ளாக் செய்யும்படி நேர்ந்தது.  அதை உங்களுக்கும் சொல்ல வேண்டும்.  முதல் நண்பர் செல்வா.  அவர் என் ஆளுமையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தவர்.  அவருடைய மேனரிஸங்களில் ஒன்று, ”எப்போ வர்றீங்க செல்வா?” என்றால், இதோ கிளம்பிட்டேன் சாரு என்பார்.  ஆனால் மறுநாள்தான் வருவார்.  அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொள்ள பெரும் பிரச்சினை ஆகி விட்டது.  சில நிபுணர்கள் இருப்பார்கள்.  இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே கயிற்றைக் கட்டி ஜாலியாக நடப்பார்கள்.  சில பிராமணர்களைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு ரவுண்ட் அல்லது எப்போதாவது ஒருமுறை ரெண்டு ரவுண்டு அடிப்பார்கள்.  இப்படியெல்லாம் ஒரு மனிதன் குடிக்க முடியும் என்பதே அவர்களைப் பார்த்துத்தான் எனக்குத் தெரியும்.  அதே சமயம் குடித்துக் குடித்து அழிந்தே செத்த பிராமணர்களையும் எனக்குத் தெரியும்.  ஜி.நாகராஜன் ஒரு உதாரணம்.  ஆனால் ஒரு பெக், ரெண்டு பெக் அடிக்கும் ஆட்கள் விதிவிலக்கே இல்லாமல் பிராமணர்களாக இருப்பதை – இல்லை, ஐயர்களாக இருப்பதை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அய்யங்கார்கள் அப்படி இல்லை.  அவர்களின் மரபணுவிலேயே பலவிதமான eccentricities இருப்பதால் கணித மேதை ராமானுஜம் முதல் ட்ராஃபிக் ராமசாமி வரை, சுந்தர் பிச்சை முதல் பத்ரி சேஷாத்ரி வரை எல்லோருமே தாறுமாறாக அசாதரணர்களாக இருக்கிறார்கள்.  அசாதாரணர் என்று மட்டுமே சொன்னேன்.  எல்லோருமே மேதைகள் என்று சொல்லவில்லை.  இதில் பலபடியான தெருவோரத்து லோஃபர்களையும் ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் அப்படிப்பட்ட லோஃபரைக் கொண்ட வீட்டிலும் ஒருத்தன் அமெரிக்காவிலோ அல்லது வேதவித்தாகவோ இருப்பான்.  அதை விடுங்கள்.  நான் சொல்ல வந்தது நிபுணர்களை.  ரெண்டு பெக்கோடு ஒருத்தர் நிறுத்தினார் என்றால் அவர் அநேகமாக அய்யராக இருப்பார். 

அப்படி ஒரு நிபுணர் செல்வா.  நிபுணர்களோடு பழகும்போது நம் போன்ற சராசரிகள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  ரெண்டு மலைமுகடுகளுக்கு இடையே கயிறு கட்டி நடக்கலாமா?  ஒருநாள் பாண்டிச்சேரியில் இருந்தேன்.  அவந்திகா போன் பண்ணி எப்போது வருகிறாய் என்று கேட்டாள்.  இதோ கிளம்பிட்டேம்மா என்று சொல்லி விட்டேன்.  கிளம்பியது என்னவோ இரண்டு நாள் கழித்துத்தான்.  வீட்டுக்கு வந்ததும் பெரிய பிரச்சினை ஆகி விட்டது.  உடனே செல்வாவை ப்ளாக் பண்ணினேன்.  இப்போது ப்ளாக் பண்ணி இருக்கிறாரா அன்பிளாக் பண்ணியாயிற்றா என்று தெரியவில்லை.  ஸ்ரீராமுக்குத்தான் தெரியும். 

இன்னொருவர் குணா.  நான் எந்த வெளிநாட்டுக்குப் போகத் திட்டமிட்டாலும் நானும் வருகிறேன் சாரு, உங்கள் செலவெல்லாம் என் செலவுதான் என்பார்.  கடைசி நேரத்தில் கவிழ்த்து விடுவார்.  மனைவியிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.  இதுவும் என்னை ரொம்பவும் பாதித்தது.  ஒருநாள் சில நண்பர்கள் ஐரோப்பா கிளம்பிய போது நான் தான் முதல் ஆளாக முன்னுக்கு நின்றேன்.  கடைசி நிமிடத்தில் கவிழ்த்து விட்டேன்.  அவந்திகா அனுமதி கொடுக்கவில்லை!  அன்றே குணாவையும் ப்ளாக் பண்ணினேன்.  யார் யாரெல்லாம் நம் ஆளுமையில் ஆளுமை செலுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் ப்ளாக் பண்ணுவோம்!

***

இப்படியாகத்தான் ஒருநாள் பா. ராகவனை ப்ளாக் பண்ண நேர்ந்தது.  எப்படியும் வாரம் ஒருமுறையாவது பேசி விடுவோம்.  நானோ அவரோ அழைத்து விடுவது வழக்கம்.  ஏதாவது ஒரு சப்ஜெக்ட் இருக்கும்.  ஆனால் சமீபத்தில் ஒரு மாதமாக போன் இல்லை.  நாமே அழைப்பதை விட அவரை அழைக்க வைப்போம், என்ன வழி என்று யோசித்தேன்.  ப்ளீஸ் கால் மீ என்றால் அதைப் பார்க்கும் போது அழைத்து விடுவார்.  ஆனால் நான் தஞ்சாவூர்க்காரன் ஆயிற்றே?  அப்படி நேரடியாகச் செய்வது எங்கள் ஊரில் பழக்கம் இல்லை.

ப்ளாக் செய்தால் உடனே அழைப்பார் என நினைத்து ப்ளாக் செய்து விட்டேன்.  எனக்கு ஸ்ரீராம் மாதிரி அவருக்கு அவரது இல்லத்தரசி போலிருக்கிறது.  ”என்னங்க, சாரு உங்களை ப்ளாக் செய்திருக்கிறார்?” என்று கேட்க, இவர் சீரியலில் இரண்டாவது மனைவி முதல் மனைவியைக் கொலை செய்வது எப்படி என்று திட்டமிடுகின்ற சீனை எழுதிக் கொண்டிருந்த மும்முரத்தில் அதை அத்தோடு விட்டு விட்டார்.   பிறகுதான் நேரம் கிடைத்த போது ராம்ஜிக்கு போன் போட்டுக் கேட்டிருக்கிறார்.  ”சாரு ஒரு கொழந்தைங்க, விடுங்க” என்று சொல்லி விட்டிருக்கிறார்.

பிறகு ரொம்ப நாளாக இது இப்படியே கிடப்பில் கிடந்ததால் என்னதான் சமாச்சாரம் என்று நானே போன் போட்டுக் கேட்டு எல்லாம் ஒருவழியாக சமாதானம் ஆயிற்று.  நானும் உடனடியாக ஸ்ரீராமிடம் சொல்லி அன்ப்ளாக் செய்தேன். 

***

இப்படித்தான் ஒருநாள் ஏதோ காரணத்தால் ஜெயமோகனை முகநூலில் ப்ளாக் பண்ண முடிவு செய்தேன்.  ஜெ. முகநூலில் ஃபேக் ஐடியில்தான் இருப்பதாக உளவுப் படை மூலம் தெரிந்தது.  ஆனால் உளவுப் படையால் அவரது ஐடியைப் பிடிக்க முடியவில்லை.  எக்ஸைக் கூப்பிட்டேன்.  அவர் நீண்ட காலமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் என்னுடைய ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்.  சேருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது.  அதற்காகவே சம்ஸ்கிருதமெல்லாம் கற்று, வேதம் உபநிஷதம் எல்லாம் படித்து, தத்துவத்தில் ஒரு அளவுக்கு உயர்ந்து அங்கே போய் பல தத்துவ விவாதமெல்லாம் செய்து நிரூபித்த பிறகுதான் சேர முடிந்திருக்கிறது.  அதாவது, நேரில் ஸ்தூலமாக இருந்தால் வெண்முரசு மட்டுமே போதும்.  ஆனால் சூக்ஷ்ம வடிவில் – அதாவது, வர்ச்சுவலாக நடமாடும்போது அதெல்லாம் தேவைப்பட்டதாம்.  என்று ஸ்லீப்பர் செல் சொன்னார்.  எனக்கு நேரடியாகத் தெரியாது.  பிறகு ஸ்லீப்பர் செல் உண்மையிலேயே அங்கே சாய்ந்து விட்டாரா ஸ்லீப்பர் செல்லாகவே இருக்கிறாரா என்று கண்டு பிடிக்க இன்னொரு கையை ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.

சரி, ஆரம்பித்த இடம் எங்கே?  ஜெயமோகனின் ஃபேக் ஐடி.  சீனியைப் பிடி என்று அவருக்கு ஃபோன் போட்டேன்.  எனக்கு எப்டிங்க தெரியும் என்றார்.  அட, வெண்பாவைக் கேளுங்க என்றேன்.  இதோ கேட்டு சொல்கிறேன் என்றவரிடமிருந்து போனே இல்லை.  பேசாமல் சீனியை ப்ளாக் பண்ணலாமா என்று பார்த்தேன்.  ம்ஹும்.  கோபத்தில் நம் கையை நாமே வெட்டிவிடக் கூடாது.  ஸ்ரீராம், சீனி ரெண்டு பேர் பக்கமே போகக் கூடாது.  ரெண்டு நாள் கழித்து சீனி கூப்பிட்டார்.  அந்த வெண்பா இப்போ ரொம்ப பிஸி போலருக்கு சாரு, ஆளைப் பிடிக்கவே முடியல.  பிறகுதான் தெரிஞ்சது, அவ முருகனோட சேர்ந்து வேலை செய்றாப்ல இருக்கு என்றார்.  ”ஐயோ, ஆன்மீகத்துல சேர்ந்துட்டாங்களா?” என்றேன் ஆச்சரியத்துடன்.  

”என்ன சாரு, தண்ணி அடிச்சாக்கூட ஸ்டெடியா இருப்பீங்களே, என்ன ஆச்சு?”

“நீங்கதானே முருகன் அது இதுன்னீங்க? அதுதான் பழனி பக்கம் போய்ட்டாங்களோன்னு நினைச்சேன்” என்றேன்.

ஏனென்றால் முன்பு இப்படித்தான் ஒரு கவிதாயினி திடுதிப்பென்று ஈஷாவில் சேர்ந்து மொட்டையடித்துக் கொண்டு வந்தார்.  அந்த சம்பவம் என் மனதை ரொம்பவே பாதித்திருந்தது.  அப்படி நினைத்துக் கேட்டேன்.  முருகன் என்றால் பழனி முருகன் இல்லையாம்.  யாரோ பிஜேபி தலைவராம்.  ”ஆமா, ஹெச். ராஜால்ல இருந்தார்?”  அவர் போய் ரொம்ப நாள் ஆயிற்றாம்.  ”என்னது? போய்ட்டாரா?” 

“இல்ல, சாரு, தலைவர் பதவியிலேர்ந்து போய்ட்டார்.”

“ஓஹோ.  அதானே.  நல்ல மனுஷனாச்சேன்னு பார்த்தேன்.” 

ஆக, இப்போது வெண்பா ஒரு பெரிய இடத்தில் இருக்கிறார்.  பிடிக்க முடியவில்லை.  அப்படியானால் ஜெயமோகனை ப்ளாக் பண்ண முடியாதா?  அருண்மொழி நங்கைக்குத் தெரியும்.  ஆனால் அவர் ஜெ.வின் தற்கொலைப்படைத் தலைவி.  கிட்டத்தில் நெருங்க முடியாது.

இப்படியாக என்ன முயன்றும் ஜெயமோகனை ப்ளாக் பண்ண முடியாமல் போனது. 

***   

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai