சென்னை புத்தகக் கண்காட்சியை நான் ஒரு தமாஷாகவே நினைக்கிறேன். காரணம் என்ன என்பது பற்றி பலமுறை விளக்கி எழுதி விட்டேன். அங்கே கூடும் ஆயிரத்தில் ஒருத்தர் கூட இலக்கியப் புத்தகங்களை வாங்குவதாகத் தெரியவில்லை. மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்குள் கிடக்கும் மிருகங்களைப் போல் ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்த சில எழுத்தாளர்களோடு நானும் அமர்ந்தேன் சிறிது நேரம். வெள்ளிக்கிழமை நடந்த வாசகர்களுடனான கலந்துரையாடல் படு சொதப்பல். விளம்பரமே செய்யப்படாமல் முதல் நாள் என்னைப் பலி கொடுத்தார்கள். எனக்கு இது எல்லாமே தமாஷ் என்பதால் நான் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் வாசகர்களுடன் கலந்துரையாடல் என்று சொல்லி விட்டு, ஆறேகால் மணிக்கு ஒரு குப்பையான குறும்படத்தைப் போட்டது அநியாயம். அதர்மம். புத்தகக் கண்காட்சியினரை இதற்காக வன்மையாகக் கண்டிக்கிறேன். உரையாடல் என்று சொல்லி விட்டு ஏன் படம் போட்டீர்கள்? படம் உண்டு என்று முன்பே சொல்லி இருக்க வேண்டியதுதானே? சொல்லியிருந்தால் நான் வர மாட்டேன் என்று சொல்லியிருப்பேனே? என்னை சண்டைக்காரன் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இப்படி ஏதாவது அவமானப்படுத்திக் கொண்டே இருந்தால் சண்டை போடாமல் வேறு என்ன செய்வது? அதிலும் அந்தப் படம் குடிகாரன் எடுத்த வாந்தியைப் போல் இருந்தது. முட்டாள்தனத்தின் உச்சம். படம் ஆரம்பித்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகக் காட்ட ஆரம்பித்ததுமே நான் வெளிநடப்பு செய்து விட்டேன். படமா அது? இப்படி முஸ்லீம்களை அவமானப்படுத்துவதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ? அந்தக் குப்பைப் படம் முடிந்த பிறகுதான் அரங்கத்தின் உள்ளே வந்தேன்.
பல வாசகர்கள் நல்ல கேள்விகளும் பல வாசகர்கள் படு மட்ட ரகமான கேள்விகளையும் கேட்டார்கள். மரங்கள் பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் எத்தனை மரம் நட்டீர்கள் என்று கேட்டார் ஒரு மனிதர். திருவள்ளுவர் எத்தனை மரம் நட்டார் என்று கேட்க முடியுமா? என்று ஆரம்பித்து செம பதில் சொன்னார் மனுஷ்ய புத்திரன். கடைசியில் புத்தகக் கண்காட்சியின் பொருளாளர் எனக்கு ஒரு பரிசு வழங்கினார். ஒரு புத்தகப் பார்சல். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தால் இரண்டு குப்பைப் புத்தகங்கள். துன்பங்களை இன்பமாக மாற்றுவது எப்படி? இன்னொரு நூல், தமிழர்களின் பட்டியல். செருப்பால் வாங்கியது போல் இருந்தது. கூப்பிட்டு அவமானப்படுத்துகிறார்கள். சித்ரவதைக் கூடங்களில் மலத்தைக் கரைத்துக் குடிக்கச் செய்வார்கள். புத்தகக் கண்காட்சி அமைப்பினர் எனக்குக் கொடுத்த இரண்டு புத்தகங்களில் அதைத்தான் செய்துள்ளனர். எழுத்தாளன் என்றால் எவன் வேண்டுமானாலும் ass fuck பண்ணலாம் போல் இருக்கிறது… சே… பரிசு கொடுக்க உங்களுக்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா? பரிசு கொடுக்கிறேன் என்று ஏன் ஐயா அவமானப்படுத்துகிறீர்கள்? நான் பரிசுக்காகவா அங்கே வந்து பேசினேன்? இந்த சமூகம் எந்த அளவுக்கு மூடர்களின் உறைவிடமாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. இது போன்ற குப்பைகளை பரிசு என்று நினைத்துக் கொடுக்காமல் வெறுமனே நன்றி என்று சொல்லியிருக்கலாம். பாராட்டி இருப்பேன். இப்படி ஒரு பதிவை எழுதியிருக்க மாட்டேன். இலக்கியம் படிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும். எப்படியாவது போங்கள். என்னையும் உங்கள் குப்பைக் கலாச்சாரத்தில் சேர்க்காதீர்கள்.