த அவ்ட்ஸைடர் (14)

படப்பிடிப்பு வேலையெல்லாம் முடிந்து எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லாமல் ஜாலியாக பாங்காக் நகரில் இரவுக் கொண்டாட்டங்களுக்குப் பேர் போன காவோ ஸான் சாலையில் நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் ஒரு பப்பில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் நான் சீலே, அயெந்தே, விக்தர் ஹாரா என்று ஆரம்பித்த போது, ”இந்தக் கொண்டாட்டமான இரவில் அம்மாதிரி சீரியஸ் விஷயங்களெல்லாம் எதற்கு, நம் நாட்டிலும் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் சாரு” என்று சீனி சொன்னதை நான் மறக்கவே மாட்டேன் என்று நினைக்கிறேன்.  … Read more

மூவர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பின் போது எடுத்த புகைப்படம். எடுத்தவர் பிரபு காளிதாஸ்.

ஹிந்து மதம் (2)

இந்து மத எதிர்ப்பும், இந்துத்துவ வெறியும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன. இதிலிருந்து நோகாமல் தத்துவம், கலை, பண்பாடு போன்ற உயர்ந்தவற்றை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது?ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும்போது அது மதத்தை பாதிக்கிறது எனும்போதே மதம் ஜாதிகளை காக்கிறது என்றுதான் ஆகிறது. நாங்கள் இந்துக்களாக இருக்கவே விரும்பவில்லை. அது எங்களை ஜாதியை சொல்லி இழிவு செய்கிறது என்று ஒரு சாரார் புகார் எழுப்பும்போது அந்த குறைகளை கேட்க, கலைய இந்துமத அமைப்பிற்குள் என்ன … Read more

தமிழிலிருந்து ஆங்கிலம்

சுந்தர ராமசாமி அவர் காலத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகக் கருதப்பட்டார். அவருடைய ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது ஜே.ஜே. சில குறிப்புகள். அந்த நாவல் ஆங்கிலத்தில் எப்படி கசாப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆங்கில நாவலாசிரியர் விளாசுகிறார். https://www.thehindu.com/books/literary-review/Review-A-new-translation-of-Sundara-Ramaswamy%E2%80%99s-1981-classic-JJ-Some-Jottings/article16442835.ece