புத்தக விழா – 3

நேற்று புத்தக விழா முதல் நாள். ஆறு மணிக்குப் போனேன். எடப்பாடி மேடையில் நின்று படித்துக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் என்று காதில் விழுந்தது. எந்தக் கெடுபிடியும் இல்லை. ஏதோ முனிசிபல் கவுன்சிலர் ரேஞ்சுக்குத்தான் இருந்தது. இதுவே ஜெயலலிதா என்றால் காட்டு தர்பாராக இருந்திருக்கும். இதற்கே எடப்பாடிக்கு மக்கள் திரும்பவும் ஓட்டுப் போடுவார்கள் போல் தெரிகிறது. சென்ற வருடமே புத்தக விழா ஈ ஓட்டியது என்றேன். இந்த ஆண்டோ அந்த ஈ கூட இல்லை. மயான அமைதி. புத்தக … Read more

புத்தக விழா – 2

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவில் உள்ள Writers Corner என்ற அரங்கில் என்னுடைய படைப்புகள் பற்றி அறிமுகம் செய்து உரை ஆற்றுகிறார் காயத்ரி. நானும் பேசுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை புத்தக விழா – 1

ராஸ லீலா கலெக்டிபிள் தயாராகி விட்டது. அதை புத்தக விழாவில் என்னிடம் வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். மற்றவர்களுக்கு என் கையெழுத்துடன் கொரியரில் அனுப்பி வைக்கப்படும். charu.nivedita.india@gmail.com 2. புத்தக விழாவுக்கு தினமும் வருவேன். சென்ற ஆண்டைப் போல் மதியம் மூன்று மணிக்கே வந்து வெட்டியாக மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லாததால் தினமும் மாலை ஐந்து மணிக்கே வரலாம் என்று இருக்கிறேன். எனவே என்னைச் சந்திக்க நினைப்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு … Read more

ஒரு உதவி

யு.எஸ்.ஸிலிருந்து சில நூல்களை சென்னைக்கு எடுத்து வர வேண்டும். வெய்ட் அதிகம் இருக்காது. மொத்தமே ரெண்டு கிலோதான் இருக்கும். சென்னை வந்ததும் ஃபோன் செய்தால் நண்பர்களை அனுப்பி வாங்கிக் கொள்வேன். அல்லது, கொரியர் செய்து விடலாம். யு.எஸ்.ஸிலிருந்து யாரும் இங்கே வருகிறீர்களா? எழுதவும். charu.nivedita.india@gmail.com

அடுத்த நூற்றாண்டின் கவிதை

இந்த நூற்றாண்டின் கவிதை என்பார்கள் இல்லையா, அதுபோல இது அடுத்த நூற்றாண்டின் கவிதை… 30)மேக் புக் ப்ரோ குப்பையான அறையில் அமர்ந்து நள்ளிரவில் எழுதிக்கொண்டு இருந்தேன். எங்கிருந்தோ ஓடி வந்த பூரான் ஒன்று மேக் புக் ப்ரோவின் பின் பதுங்கிக்கொண்டது. பூரான் தூங்கும் நேரம் பற்றி ஒருக்கணம் சிந்தித்தாலும், அதைக் கொல்ல முடிவு செய்தேன். அறையெங்கும் தேடினாலும், புத்தகத்தைத் தவிர வேறெதுவும் அடிக்க அகப்படவில்லை. ஒரு க்ளாஸிக் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மேக் புக் ப்ரோவின் பின்னால் வந்தேன். … Read more

Marat/Sade

U.S.இல் வசிக்கும் நண்பர்களுக்கு: The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade என்ற தலைப்பில் ஒரு நாடகம் உள்ளது. இந்த நாடகத்தை யு.எஸ்.ஸில் பலமுறை அரங்கேற்றி உள்ளனர். அந்த நாடகம் அப்படியே படம் பிடிக்கப்பட்டு டிவிடியாகவும் கிடைக்கிறது. அந்த டிவிடியை யாரேனும் வாங்கி அனுப்ப இயலுமா? நீண்ட தலைப்பாக இருப்பதால் … Read more