அடியேனைப் பற்றி அவந்திகா
ட்ராகுலா படம் பார்த்திருப்பீர்கள். ட்ராகுலா யாரையாவது கடித்தால் அவர்களும் ட்ராகுலாவாக ஆகி விடுவார்கள். என்னுடைய 15 வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னோடு கூட இருப்பவர்களும் என்னைப் போலவே எழுத்தாளர்களாகி விடுகிறார்கள். 2005-இல் எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்த போது கலா கௌமுதி, மாத்ரு பூமி, மாத்யமம் என்ற மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அறுவை சிகிச்சையின் காரணமாக மூன்று பத்திரிகைகளிலும் இடைவெளி வருவதை நான் விரும்பாததால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே … Read more