குருவின் பாதங்கள்…
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் குருவின் பாதங்கள் என்ற என் கட்டுரை வெளி வந்துள்ளது. முடிந்தால் பாருங்கள்.
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் குருவின் பாதங்கள் என்ற என் கட்டுரை வெளி வந்துள்ளது. முடிந்தால் பாருங்கள்.
jagermeister என்ற மூலிகைகளால் ஆன மது ஒன்று உள்ளது. அராத்துவின் நண்பர் பிரபு எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினார். ஜெர்மன் மது. மூலிகை மணம் வீசும் திரவம். ருசி நம் ஜிகிர்தண்டா ருசி. இதை ஹெகாமஸ் என்று உச்சரிக்க வேண்டுமாம். பாக்கி விபரங்களை நீங்கள் கூகிளில் தேடிக் கொள்ளலாம். பிரபுவும் அராத்துவும் நானும் ஒருமுறை குடித்திருக்கிறோம். மூன்று பேருக்கும் ஒரு போத்தல் சரியாக இருந்தது. இதைத் தண்ணீர் சேர்க்காமல் ஃப்ரீஸரில் வைத்து சில்லென்று அருந்த வேண்டும். இப்போது இரண்டாவது … Read more
எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. எப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே இருக்கிறது… இந்தப் பாடலை கிட்டத்தட்ட எல்லா இசைக் கலைஞர்களும் பாடியும் வாசித்தும் இருக்கிறார்கள். கீழே உள்ள இணைப்பில் உள்ளது kaori kobayashi ஸாக்ஸில் வாசித்தது… http://www.youtube.com/watch?v=BROSIBd6IsA
http://www.youtube.com/watch?v=zRvhQ5Rf6-U இந்த பியானோவைக் கேட்டுக் கொண்டே பின்வருவதை நீங்கள் படிக்கலாம். ”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் இரண்டு பேரும் எப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள்?” என்று மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் கேட்டார். இதை யார் சொன்னது உங்களுக்கு என்று கேட்டேன். அவர் தான் சொன்னார் என்றார் நண்பர். ”தெரியவில்லை, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்றேன். போன மாதம் இன்னொரு நண்பர் ”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் … Read more
நேற்று காலையில் பாபா கோவிலுக்குப் போய் விட்டு வந்து வீட்டிலேயே ”எட்டு” போட்டுக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் பிரம்மாண்டமான ஒரு கார் வந்து நின்றது. முகப்பில் அதிமுக கொடி. அதிமுக செங்கோட்டையன் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அவர் வீட்டுக்கு வந்த வண்டியாக இருக்கும் என்று விட்டு விட்டேன். சற்று நேரத்தில் பார்த்தால் வாசலில் உள்ள கேட் தட்டப்படும் ஒலி. என் வீட்டுக்குத்தான். யார் அது இந்தக் காலை நேரத்தில், அதுவும் அதிமுக கொடியோடு என்று … Read more
(தமிழ் சினிமா உலகில் மனசாட்சி உள்ள ஒரு சிலரில் B. லெனினும் ஒருவர். சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர். நாங்கள் சந்தித்துக் கொண்டது வெகு அரிதாகவேதான். சில சமயங்களில் போனில் பேசுவோம். ஆனால் லயோலா கல்லூரி கருத்தரங்கு ஒன்றில் அவர் என்னை மேற்கோள் காட்டிப் பேசிய போது அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும், எவ்வளவு உன்னிப்பாக என்னை வாசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. அவரது … Read more